எம்.பி. தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! புதிய கருத்துக்கணிப்பில் தகவல்!

Published : Jan 07, 2019, 04:08 PM ISTUpdated : Jan 07, 2019, 04:22 PM IST
எம்.பி. தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! புதிய கருத்துக்கணிப்பில் தகவல்!

சுருக்கம்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று புதிய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.  

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று புதிய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே  உள்ள நிலையில், கருத்துக்கணிப்புகளும் வந்தவண்னம் உள்ளன. இந்த வகையில் இண்டியா டிவி - சி.என்.எக்ஸ். நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்றைக்கு தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்காளர்கள் வாக்களிப்பார்கள்  என்ற அடிப்படையில் நாடு முழுவதும் இந்தக் கருத்துக்கணிப்பை நடத்தப்பட்டுள்ளது. வரும்  தேர்தலில் பாஜக கூட்டணி 257 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 146 இடங்களையும், பிற கட்சிகள் 140 இடங்களிலும் வெல்லும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த முறை உ.பி.யில் பாஜக 71 இடங்களில் வெற்றி வெற்ற நிலையில், இந்த முறை 40 தொகுதி மட்டுமே கிடைக்கும் எனக் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. 10 தொகுதிகளையும்  தினகரனின் அ.ம.மு.க. 4 தொகுதிகளையும்  காங்கிரஸ் 3 தொகுதிகளையும் பா.ம.க. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் எனக் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த நிலைமை மாறலாம் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!