இந்தியாவில் 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு தேவை.. இதை நீக்கினால் பேரழிவு நிச்சயம்.. ICMR தலைவர் பகீர்..!

Published : May 13, 2021, 11:38 AM IST
இந்தியாவில் 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு தேவை.. இதை நீக்கினால் பேரழிவு நிச்சயம்.. ICMR தலைவர் பகீர்..!

சுருக்கம்

இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு தேவை என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக (ஐசிஎம்ஆர்) தலைவர் பல்ராம் பார்கவா கூறியுள்ளார். 

இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு தேவை என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக (ஐசிஎம்ஆர்) தலைவர் பல்ராம் பார்கவா கூறியுள்ளார். 

இந்தியாவில், கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாகப் பரவி வருகிறது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம், கேரளா, கர்நாடகா, டில்லி, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில், கொரோனா நிலவரம் தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தலைவர்  பலராம் பார்கவா செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- இந்தியாவில் உள்ள 718 மாவட்டங்களில் 4ல் மூன்று பங்கு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 10 சதவீதத்திற்கு அதிகமாக இருப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். 

குறிப்பாக தலைநகர பகுதிகளான டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொற்றின் பரவல் வேகம் அதிகமாக இருப்பதாக பல்ராம் பார்கவா கூறியுள்ளார். 10 சதவீதத்திற்கும் மேல் தொற்று பாதிப்பு உள்ள மாவட்டங்களில் பாதிப்பு 5 சதவீதமாக குறையும் வரை முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் அவர் அழுத்தமாக கூறியுள்ளார். அதற்கு 6 முதல் 8 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதே சிறந்த தீர்வாக இருக்கும். ஆனால், அதையும் உறுதியாக கூறமுடியாது என கூறியுள்ளார். 

இந்தியாவில் கடும் பாதிப்பை சந்தித்த டெல்லியில் பாதிப்பு சதவீதம் 35திலிருந்து 17ஆக குறைந்திருந்த போதிலும் தற்போது உள்ள சூழலில் ஊரடங்கை விலக்கினால் இது பேரழிவாக அமைந்துவிடும் என எச்சரித்துள்ளார். ஏப்ரல் 15ம்  தேதியே பாதிப்பு சதவீதம் 10ஆக உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கிற்கு வலியுறுத்தியதாகவும், ஆனால், மத்திய அரசு முழு ஊரடங்கு என்பது கடைசி ஆயுதமாக இருக்கும் என கூறிவிட்டதாகவும் பல்ராம் பார்கவா வேதனை தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..