
சில தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்கள் சில நாட்களுக்கு பிறகு மூச்சு திணறல் ஏற்பட்டவுடன் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்படுவது வேதனையளிக்கிறது, மக்களின் உயிரோடு விளையாடவேண்டாம் என தனியார் மருத்துவமனைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை செனாய் நகரில் 40 படுக்கை வசதியுடன் கூடிய தனியார் கொரோனா தடுப்பு மருத்துவமனையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்: கொரோனா தொற்று பரவலால் தமிழகம் மிக இக்கட்டான காலகட்டத்தில் இருப்பதாக கூறினார்.
ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும் தொற்றாளர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை மட்டும் அளித்து அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டவுடன், அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவிடுவதாகவும், இது மிகவும் வேதனையளிப்பதாக இருப்பதாகவும் அவர் கூறினார், இது போன்று மனித உயிர்களோடு விளையாடும் செயலில் தனியார் மருத்துவமனைகள் ஈடுபடவேண்டாம் என குறிபிட்ட அவர் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த இக்கட்னான காலகட்டத்தை பயன்படுத்தி ரெமிடிசிவர், கொரோனா தடுப்பு மருந்துகளை விலை அதிகமாக விற்பனை செய்வது மனிதாபிமானமற்ற செயல் எண குறிபிட்ட அமைச்சர். விலை அதிகமாக விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் பெருவதர்க்கா பிரதமர் நரேந்திரமோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியவர்களோடு முதல்லமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசிவருவதாக குறிபிட்ட அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்னும் கடுமையா உழைக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.ஊரடங்கை மேலும் கடுமையாக்கப்படாமல் இருக்க மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.