தேர்தலுக்கு பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கொரோனாவால் பாதிப்பு.. காவல் ஆணையர் அதிர்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Apr 16, 2021, 10:19 AM IST
Highlights

பின்னர் பேசிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், கொரோனோ என்பது மிக கொடிய தொற்று நோய் ஆனால் அதனை எளிமையாக எதிர்க்கொள்ளும் வழிமுறைகளான முககவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். 

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொரோனோ விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச் காவல் உதவி மையம் அருகில் நடைபெற்ற கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். கொரோனோ விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கரை இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களிள் ஓட்டி பாதுகாப்பு உபகரங்களான முககவசம் கிருமிநாசினி அடங்கிய பையினை வழங்கி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். 

பின்னர் பேசிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், கொரோனோ என்பது மிக கொடிய தொற்று நோய் ஆனால் அதனை எளிமையாக எதிர்க்கொள்ளும் வழிமுறைகளான முககவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கடந்த ஆண்டு கொரோனோ தொற்று பரவிய நேரத்தில் தடுப்பூசி வரவில்லை. ஆனால் தற்போது கொரோனோவை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளவேண்டும். தொடர்ந்து இதுபோன்ற கொரோனோ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை முழுவதும் காவல்துறை சார்பில் நடத்தி வருகிறோம். மக்கள் அதனை பயன்படுத்திக்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,சென்னையின் முக்கியமான இடங்களிலும் கொரோனோ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். கொரோனோ அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் மேலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.தேர்தலுக்குப் பின்னதாக  நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கொரோனோ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அவர், மேலும் 2000 த்திற்க்கும் மேற்பட்ட காவலர்கள் இதுவரையில் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக தெரிவித்தார். முகக் கவசம் அணியாதவர்களென  தினம் தோறும் 800க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!