500 டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து மேலும் மூடப்படும் கடைகள்.. அமைச்சர் முத்துசாமி சொன்ன குட்நியூஸ்..!

By vinoth kumarFirst Published Jul 13, 2023, 11:30 AM IST
Highlights

டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகின்றன.  டாஸ்மாக் கடைகள் திறப்பில் எந்த மாற்றமும் செய்யும் திட்டம் இல்லை.

டாஸ்மாக் கடைகள் திறப்பில் நேரம் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என மதுவிலக்கு ஆயுத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி;- டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகின்றன.  டாஸ்மாக் கடைகள் திறப்பில் எந்த மாற்றமும் செய்யும் திட்டம் இல்லை. டாஸ்மாக் கடைதிறப்பு குறித்த எனது பேட்டி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நான் இதில் என்னென்ன சிக்கல்கள் உள்ளது என்பதை யதார்த்தமாக கூறினேன். அந்த சிக்கல்களை ஒதுக்கிவிட்டு செல்ல முடியவில்லை. உடனே 24 நேரமும் நாங்கள் கடை திறந்து வைக்கப்போவதாக பேசுவது என்ன நியாயம்? 

இதையும் படிங்க;- திமுகவின் ஆட்டம் இன்னும் 48 மணி நேரம் தான்..! ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்கும் எச்.ராஜா

டெட்ரோ பேக்கில் மதுபானம் விற்பனை செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்பட்டவில்லை. 500 கடைகளை மூட வேண்டிய நோக்கம் மதுபான கடைகள் எண்ணிக்கையை குறைக்கத்தான். பள்ளிகள், கோயில்கள் அருகில் எத்தனை கடைகள் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே அவை குறித்து ஆய்வு செய்து மீண்டும் மூடப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். மூடப்படும் கடைகளுக்கு பதிலாக இன்னொரு இடத்தில் கொண்டு வருவது நோக்கமில்லை. மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

இதையும் படிங்க;-  முதல்வர் ஸ்டாலின் இதை செய்யாவிட்டால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - வானதி சீனிவாசன்

டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வயது குறைந்தவர்கள் மது வாங்க வந்தால் அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 

click me!