BREAKING கொரோனாவை தடுக்க மேலும் கட்டுப்பாடுகள்.. இரவு நேர ஊரடங்கு நேரம் மாற்றம்? அறிவிப்பு இன்று வெளியாகிறது.!

By vinoth kumarFirst Published Apr 24, 2021, 12:17 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலை மின்னல் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 3000ஐ நெருங்கி வருகிறது.இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று காலை வீடியோ கான்பரன்சிங் மூலமாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், `கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து தமிழக அரசின் சார்பில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக டிஜிபி திரிபாதி, சுகதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நேற்று மாலை தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அரசு ஆலோசகர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் சென்னை, அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அப்போது, கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க பிரதமர் மோடியுடன் நடந்த ஆலோசனை, அந்த கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள், பிரதமர் அளித்த ஆலோசனைகள் குறித்து முதல்வர் எடப்பாடியிடம் அதிகாரிகள் விளக்கினர். 

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிற்பகல் தலைமைச் செயலாளர், சசுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு இரவு நேர ஊரடங்கு நேரம் மாற்றம்,  ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்லாது மேலும் சில நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், வழிகாட்டுத்தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய கட்டுப்பாடுகள் குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. 

click me!