வீட்டில் தோண்ட தோண்ட பணம்..!! அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 13, 2020, 10:11 AM IST
Highlights

இவர்கள் அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை பொறுக்கி அதை வைத்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இதில் பிரபாவதி  கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு  உடல் அழுகிய நிலையில் அங்குள்ள நடைபாதையில் இறந்து கிடந்தார்

சென்னை ஓட்டேரியில் மூதாட்டி வீட்டில் சேகரித்து வைத்து இருந்த குப்பைகளை தோண்ட தோண்ட பணம் கிடைத்துள்ள சம்பவம் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சென்னை ஓட்டேரி சத்தியவாணிமுத்து நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே உள்ள குடிசையில் ராஜேஸ்வரி (61) மகேஸ்வரி என்ற பார்வதி(59) பிரபாவதி (57) ஆகிய மூன்று மூதாட்டிகள் வசித்து வருகின்றனர். 

இவர்கள் அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை பொறுக்கி அதை வைத்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இதில் பிரபாவதி  கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு  உடல் அழுகிய நிலையில் அங்குள்ள நடைபாதையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த தலைமைச் செயலக காலனி இன்ஸ்பெக்டர்  ராஜேஸ்வரி அவரது உடலை மீட்டு போலீசார் உதவியுடன் அடக்கம் செய்தார். இந்நிலையில் அவருடைய சகோதரிகள் கடந்த சில நாட்களாக சாலையோரம் தங்கி வந்தனர். அவர்களிடம் விசாரித்த தலைமை செயலக காலனி போலீசார் வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். வீடு இருந்தும் வீட்டில் தங்க இடம் இல்லை என்று மூதாட்டிகள் கூறியதை கேட்டு போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.

 

அப்போது வீட்டிற்குள் குப்பைகள் குவியல் குவியலாக மூட்டை கட்டப்பட்டு இருந்துள்ளன. போலீசார் மாநகராட்சி உதவியுடன் அந்த குப்பைகளை 15 லாரிகள் மூலம் அள்ளி சென்றனர். அப்போது அந்த வீட்டில் ஆங்காங்கே பணம் சிதறி இருப்பதை கண்டு அதை சேகரித்து எண்ணிப் பார்த்ததில் 2 லட்சத்துக்கும் அதிகமான பணம் இருப்பது தெரியவந்தது. மேலும் செல்லா நோட்டுகளான பழைய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளும் சுமார் 40,000 வரை இருந்துள்ளது. மூதாட்டிகளின் வீட்டிற்குள் இரண்டு லட்சத்திற்கும் மேல் பணம் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது, அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தற்போது அந்த வீட்டை சுத்தம் செய்து வருகின்றனர்.

 

click me!