
ஆர்.கே.நகர் தொகுதியில் பணபட்டுவாடா செய்த டி.டி.வி தினகரனின் ஆதரவாளர்கள் 23 பேர் இதுவரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கள் அவரவர் தகுதிகளுக்கேற்ப தங்களால் ஆன முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கு ஆதரவாக அவரது அதாரவாளர்கள் பணபட்டுவாடா செய்வதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
தினகரனின் ஆதரவாளர்கள் பணபட்டுவாடா செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் பணத்தை பிரித்து கொடுக்க முடியாமல் 500 ரூபாய் நோட்டுக்கும் 2000 ரூபாய் நோட்டுக்கும் சில்லறை தட்டுபாடு நிலவுவதாக தெரிகிறது.
இதேபோல் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. ஆர்.கே.நகரில் வாழும் தொகுதிவாசிகளுக்கு வீட்டு பொருட்கள் என்னென்ன தேவை என்பதை ஒரு குழு குறித்து வைத்து கொள்கிறது.
பின்னர் அவற்றை வாங்கி கொண்டு டோர் டெலிவரி செய்ய மற்றொரு குழு தயாராகிறது.
இவ்வாறு பல யுக்திகளை கையாண்டு வருகிறது தினகரன் அணி.
இதை கண்டறிந்த அனைத்து கட்சிகளும் தினகரன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்களை அடுக்கி கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதியில் பணபட்டுவாடா செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க படும் என தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நீங்கள் என்னதான் ஆட்களை பிடித்தாலும் பணபட்டுவாடாவை நிறுத்த மாட்டேன் என தினகரன் எதுவும் கண்டுகொள்ளாமல் அவர் போக்கில் உள்ளார்.