
பேஸ்புக் டூவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தலங்கள் மூலம் இரட்டை இலை
சின்னத்தை முன்வைத்து ச்சிகலா அணியினர் பிரச்சாரம் செய்வதாக
பன்னீர்செல்வம் அணியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
அதிமுக இரண்டாக பிளவு பட்டதை அடுத்து இரட்டை இலைச் சின்னத்தையும், அதிமுக
என்ற கட்சிப் பெயரை பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் தடை விதித்த்து.
ஓ.பி.எஸ். அணிக்கு மின்விளக்கையும், தினகரன் தரப்புக்கு தொப்பியையும்
தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இந்தச் சூழலில் டிடிவி தினகரன் தரப்பினர் இரட்டை இலை சின்னத்தை சமூக
வலைத்தளங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்வதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர் மைத்ரேயன்
குற்றஞ்சாட்டி உள்ளார்.