RajendraBalaji:விடாமல் தூரத்தும் அடுத்தடுத்து வழக்கு.. ராஜேந்திர பாலாஜிக்கு நாளாபுறமும் சுத்து போடும் போலீஸ்.!

By vinoth kumarFirst Published Dec 26, 2021, 1:58 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி மோசடி செய்ததாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேர் புகார் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மனுகளை பெற்றுள்ள காவல்துறை புகாரில் உள்ள முகாந்திரம் குறித்து ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி புகாரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த 17ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். 

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி கடந்த 17ம் தேதி முதல் தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் காவல்துறை தெரிவித்துள்ளது. விருதுநகரில் அதிமுக ஆர்ப்பாட்டத்தை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு வெவ்வேறு கார்களில் மாறிமாறி சென்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெங்களூரு, சென்னை, கேரளா, கோவை, மதுரை போன்ற பல்லேறு பகுதிகளில் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் சைபர் கிரைம் போலீசார் மூலம் ராஜேந்திர பாலாஜியுடன் நெருங்கிய தொடர்புடைய நபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் உள்ளிட்ட 600 பேரின் செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராஜேந்திர பாலாஜி தனது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் அதை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டுள்ளார். தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களுக்கு ‘லுக்-அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி மோசடி செய்ததாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேர் புகார் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மனுகளை பெற்றுள்ள காவல்துறை புகாரில் உள்ள முகாந்திரம் குறித்து ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகார் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

click me!