
ஆர்.கே.நகரில் நூதன முறையில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரசாரங்களும் பிரச்னைகளும் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஆர்.கே.நகர் தேர்தல் களம் உள்ளது. இந்த முறையும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு நடைபெற இருந்த தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால் இந்தமுறை பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வெளி மாவட்டத்திலிருந்து ஆர்.கே.நகருக்குள் வாகனங்களுக்கு கட்டுப்பாடு, மாலை 5 மணிக்குமேல் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யக்கூடாது, அனுமதி பெற்ற எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே வேட்பாளர்களுடன் பிரசாரத்திற்கு செல்ல வேண்டும் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
ஆர்.கே.நகரில் தேர்தல் விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றுவதை முறையாக கண்காணிக்குமாறு போலீசாருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அனுமதி பெறாத வாகனங்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் வராமல் போலீசார் கண்காணிக்க வேண்டும். மீறி அனுமதி பெறாத வாகனங்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் வந்தால், போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
அதேபோல, அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே வேட்பாளருடன் வருவதை போலீசார் உறுதி செய்ய வேண்டும். அனுமதி பெற்றவர்களை விட அதிகமானோர் வேட்பாளருடன் வருவது கண்டுபிடிக்கப்பட்டாலும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
ஆனாலும் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகக் கூறி தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பாஜக வேட்பாளர் கரு.நாகராஜனுடன் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டார்.
பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகரும் ஆர்.கே.நகரில் நூதன முறையில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட திரையரங்குகளில் படம் பார்க்க வரும் தொகுதி வாக்காளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கவனிக்கப்படுவதாக எஸ்.வி.சேகர் டுவிட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/election?src=hash&ref_src=twsrc%5Etfw">#election</a> Commission ஆர் கே நகரில் புதிய முறையில் பணப்பட்டுவாடா. தொகுதிக்குள் இருக்கும் சினிமா தியேட்டர்களில் படம் பார்க்க போகும் தொகுதி வாக்காளர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கவனிக்கப்படுகிறார்களாம். வாழ்க சன நாயகம். 🇮🇳🇮🇳🇮🇳</p>— S.VE.SHEKHER (@SVESHEKHER) <a href="https://twitter.com/SVESHEKHER/status/939726869045198849?ref_src=twsrc%5Etfw">December 10, 2017</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>