
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் பட்டுவாடா செய்ததாக 12 திமுகவினரை காவல் துறை கைத செய்துள்ளனர். அவர்களிடம் இருந்தது 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பறிமதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தொகுதியில் உள்ள வாக்காளர்கள் பண மழையில் நனைந்து வருவதாக கூறப்படுகிறது.
வாக்காளர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டு விட்டதாக தினகரன் தரப்பினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,மேலும்15 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டை தேசிய நகர், சிவகாமி நகர், இந்திராநகர், சிவன் நகர் மற்றும் தண்டையார்பேட்டை நேதாஜிநகர், பாரதி நகர் உள்பட பகுதிகளில் ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டிருந்த திருப்பூர் மாவட்ட திமுகவைச் சேர்ந்த தங்கராஜ், பாபு, முசிறி செந்தில், ஜெயசீலன், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த கரிகாலன் உள்பட 8 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக கரிகாலன் தனது வீட்டின் கிரைண்டரில் பதுக்கி வைத்திருந்த 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் தண்டையார்பேட்டை பகுதியில் பண வினியோகத்தில் ஈடுபட்டிருந்த திமுக வைச் சேர்ந்த 4 பேரை பறக்கும் படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 36 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்..