விபத்தில் சிக்கிய மோகன் பகாவத் பாதுகாப்பு வாகனம் !! பசுவைக் காப்பாற்ற முயன்றதால் சாலையில் கவிழ்ந்து விபரீதம்!!

Published : May 18, 2019, 08:37 AM IST
விபத்தில் சிக்கிய மோகன் பகாவத் பாதுகாப்பு வாகனம் !! பசுவைக் காப்பாற்ற முயன்றதால் சாலையில் கவிழ்ந்து விபரீதம்!!

சுருக்கம்

நாக்பூர் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த பசு மீது மோதுவதை தவிர்க்க முயன்ற போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகாவத் பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ர்.எஸ்.எஸ், தலைவர் மோகன் பகாவத்திற்கு மத்திய அரசின் பரிந்ததுரைக்கு ஏற்ப இசெட் பிளஸ் பாதுகாப்பு  வழங்கப்பட்டு வருகிறது. 

இதையடுத்து  பாதுகாப்பு படை வீரர்களின் வாகனம் எப்பொழுதும் அவருடன் இருக்கும். இந்நிலையில், மகாராஷ்டிராவின் சந்திரபூரில் இருந்து நாக்பூரை நோக்கி மோகன் பகவத் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் நடுவே ஒரு பசு நின்று கொண்டிருந்தது.

பசு மீது மோதாமல் இருப்பதற்காக மோகன் பகவத் பாதுகாப்பு வாகனத்தின் டிரைவர் பிரேக் அடித்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக கார் தலைகீழாக கவிழ்ந்தது. 

நேற்று மாலை 5.15 மணியளவில் வரோரா பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

PREV
click me!

Recommended Stories

சின்ன காத்துக்கே 'அட்டை' பறந்துடும்.. விஜய்யை சீண்டிய உதயநிதி.. அமித்ஷா மீதும் அட்டாக்!
அரசியல் கட்சிகளுக்கு ‘செக்’ வைத்த தமிழக அரசு.. இனி ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது.. என்ன விஷயம்?