மோகன்ஜி மதக்கலவரத்தை தூண்டுகிறார்.. இந்த படம் வெளியானால் மத கலவரம் உருவாகும். கிறிஸ்தவ அமைப்பு எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Sep 4, 2021, 1:31 PM IST
Highlights

2018 ஆம் ஆண்டில் ஜாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் திரௌபதி படம் இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளியாகி ஜாதி கலவரத்தை தூண்டுவது போல தற்போது மதக்கலவரத்தை தூண்டும் வகையில் அண்மையில் வெளியாக உள்ள ருத்திர தாண்டவம் படம் அமையும் என்பதால் உடனடியாக அந்த திரைப்படத்தை

இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாக்கபட்டுள்ள ருத்திர தாண்டவம் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளததையெடுத்து இத்திரைப்படம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதால்  திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் சிறுபான்மையினர் மக்கள் கட்சித் தேசியத் தலைவர் சாம் ஏசுதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

பிரபல இயக்குனர் மோகன் இயக்கத்தில் ருத்திர தாண்டவம் என்ற திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாக உள்ள நிலையில் திரைப்படத்திற்கான ப்ரோமோ மட்டுமே தற்பொது வெளியாகி உள்ளது, இந்த திரைப்படத்தில் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாகவும், அவர்களை அச்சுறுத்தும் படியாகவும், மத உணர்வை புண்படுத்தும் படியாகவும் இந்த திரைப்படம் இயக்கப் பட்டுள்ளதாக குற்றச்சாட்டினை முன்வைத்து சிறுபான்மை மக்கள் கட்சியினர் இதுதொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். 

2018 ஆம் ஆண்டில் ஜாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் திரௌபதி படம் இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளியாகி ஜாதி கலவரத்தை தூண்டுவது போல தற்போது மதக்கலவரத்தை தூண்டும் வகையில் அண்மையில் வெளியாக உள்ள ருத்திர தாண்டவம் படம் அமையும் என்பதால் உடனடியாக அந்த திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும், இது மாதிரியான திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர் மோகனை கைது செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் இனி பொதுத்தளத்தில் கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள் என்று யாராவது பொய் குற்றச்சாட்டு சொன்னால் அந்த குற்றச்சாட்டை சாட்சியுடன் நிரூபிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் காவல்துறையினர் அவர்கள் மீது கடுமையான கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் சிறுபான்மை மக்கள் நல கட்சி காவல் துறைக்கும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் கிறிஸ்துவ மதம் மாற்றுகிறார்கள் என்று பேசுபவர்கள் அதை சாட்சியுடன் நிரூபிக்கவிட்டால் அவர்கள் மீது சிறுபான்மை மக்கள் நல கட்சி 5 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு தொடுக்கும் என்றும் தெரிவித்தார்.இந்த வாரம் ருத்திர தாண்டவம் என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியானது அதைப் பார்த்தபோது அதில் தமிழகத்தில் மதக் கலவரத்தையும் சாதி மோதல்களையும் தூண்டும் விதமாக பல காட்சிகளும் வசனங்களும் படமாக்கப்பட்டு உள்ளதால் இந்த திரைப்படம் வெளியானால்  இந்தியாவில் மதக்கலவரம் உருவாகிவிடும்,  எனவே உடனடியாக இந்த திரைப்படம் தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 
 

click me!