மத்தியில் முரட்டுத்தனமா ஆட்சியைப் பிடிக்கும் பாஜக ! அதிரடியாக முன்னேறும் அதிமுக !! ஆங்கில சேனலின் அசால்ட் கருத்துக் கணிப்பு ….

By Selvanayagam PFirst Published Apr 5, 2019, 10:56 AM IST
Highlights

17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் 304 முதல் 316  தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி 20 முதல் 21 தொகுதிகள் வரை  கைப்பற்றும் என்றும் திமுக கூட்டணிக்கு 18 முதல் 19 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்  என்றும் தெரிய வந்துள்ளது.

17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் வரும் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும், திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகளும் களம் இறங்கியுள்ளன.

பாஜகவைப் பொறுத்தவரை பணமதிப்பிழப்பு நடவடிக்கை. ஜிஎஸ்டி போன்ற பிரச்சனைகளில் அதன் இமேஜ் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல் ரஃபேல் ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து பாஜகவை மிரட்டி வருகிறது.

இந்தப் பிரச்சனையை ராகுல் காந்தி தொடர்ந்து கையிலெடுத்து பேசி  வருவதால் நாடு முழுவதும் இப்பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த மாத மத்தியில் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் பாஜக 262 தொகுதிகளை மட்டுமே வெல்லும் என பல கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன.

இதே போல் தமிழகத்தில் திமுக கூட்டணி 35 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வட இந்தியாவில் புகழ் பெற்ற ரிபப்ளிக் தொலைக்காட்சி கடந்த வாரத்தில் நாடு முழுவதும் எடுத்த கருத்துக் கணிப்பு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி 304 தொகுதிகள் முதல் 316 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது. 

புல்வாமா தாக்குதல் மற்றும் அதற்கு இந்திய விமானப்படை பதிலடி தாக்குதல் போன்றவற்றால் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து சென்ற தேர்தலைவிட பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும் என கூறப்பபட்டுள்ளது.

இதே போல் தமிழகத்தில் கடந்த 10 நாட்கள் முன்பு வரை திமுக கூட்டணிக்கு 35 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிபப்ரிக் டி.வி. எடுத்துள்ள கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணி 20 முதல் 21 தொகுதிகள் வரை  கைப்பற்றும் என்றும் திமுக கூட்டணிக்கு 18 முத்ல் 19 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!