வாக்குச்சாவடியில் யாரும் இருக்கமாட்டார்கள்... செய்ய வேண்டியதை செய்தால் வெற்றி வரும்.. அன்புமணியின் சர்ச்சை பேச்சு!

By Asianet TamilFirst Published Apr 5, 2019, 9:48 AM IST
Highlights

‘தேர்தல் அன்று வாக்குச்சாவடியில் யாரும் இருக்கமாட்டார்கள். நாம் என்ன செய்ய வேண்டுமோ அதைப் பார்த்துகொள்ளலாம்’ என்று பாமக இளைஞரணி தலைவரும் தருமபுரி வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்போரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கள்ள ஓட்டு போடுவது பற்றி மறைமுகமாகப் பேசினார் அன்புமணி. அவருடைய இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி பேசியது இதுதான். “திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எதற்கும் வாக்கு வங்கியே கிடையாது. திமுகவுக்கு மட்டுமே கொஞ்சம் வாக்கு வங்கி உள்ளது. தேர்தல் அன்று வாக்குச்சாவடியில் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். நாம் மட்டும்தான் இருப்போம். அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாம் பேசுவது உங்களுக்குப் புரிகிறதா? செய்ய வேண்டியதை செய்வோம். அப்புறம் என்ன? இந்த இரண்டு வேட்பாளர்களும் வெற்றி பெற்றுவிடுவார்கள்” என்று அன்புமணி பேசினார்.
அன்புமணியின் பேச்சை முன்னாள் அமைச்சர் வளர்மதியும் இரண்டு வேட்பாளர்களும் அருகேயே நின்றுகொண்டு சிரித்து ரசித்தார்கள். பொதுக்கூட்ட மேடையிலேயே கள்ள ஓட்டு போடுவது பற்றி மறைமுகமாக அன்புமணி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
  

click me!