மீண்டும் மோடியே பிரதமராவார்... புதிய கருத்துக்கணிப்பில் அதிரடி தகவல்!

By Asianet TamilFirst Published Mar 27, 2019, 6:25 AM IST
Highlights

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி தனி மெஜாரிட்டி பெறும் என்று புதிய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி வோட்டர் மற்றும் ஐ.ஏ.என்.எஸ். நிறுவனங்கள் ‘தி ஸ்டேட் ஆப் தி நேஷன்’ என்ற தலைப்பில் மார்ச் மாதத்தில் இரண்டு கட்டங்களாக கருத்துக்கணிப்புகள் நடத்தின. இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 42 சதவீத ஓட்டுகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 30.4 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தேர்தலில் பாஜக கூட்டணி வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது குறித்தும், வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை குறித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டால் அதிகமான பலன்கள் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் பாஜக தனித்து 264 இடங்களிலும் கூட்டணியுடன் சேர்ந்து 305 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.


இந்த முறை உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 28 தொகுதிகளை மட்டுமே பாஜ வெல்லும் என்றும், குஜராத், மகாராஷ்டிரம், ஹரியானா போன்ற மாநிலங்களில் பாஜக அதிக தொகுதிகளில் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தென்னிந்தியாவில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. கேரளாவில் காங்கிரஸும், ஆந்திராவில் தெலுங்கு தேசமும், தமிழகத்தில் திமுக கூட்டணியும் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சி வோட்டர்  நிறுவனம் மார்ச் முதல் வாரத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 264 இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

click me!