அதிமுகவில் இணையும் சர்ச்சை நடிகர் ! தேர்தல் முடியும் வரை ஒத்திவைத்த எடப்பாடி !!

Published : Mar 26, 2019, 09:20 PM IST
அதிமுகவில் இணையும் சர்ச்சை நடிகர் ! தேர்தல்  முடியும் வரை ஒத்திவைத்த எடப்பாடி !!

சுருக்கம்

நயன்தாரா விஷயத்தில் அனைவரிடமும் செமையாக வாங்கிக் கட்டிக் கொண்ட நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, தற்போது அவர் அதிமுகவில் இணைய காத்திருப்பதாகவும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் தேர்தல் முடிந்து பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிவைத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

உடல் நிலை ஒத்துவராததால் இன்று காலை சென்னைக்குள் பிரச்சாரம் செய்ய இருந்ததை ரத்து செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தான் நடிகர் சரத்குமார் அவரை சந்தித்து அதிமுகவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். அப்போதுதான் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி குறித்த பேச்சு எழுந்துள்ளது..

கடந்த ரெண்டு வாரங்களுக்கு முன்பே ராதாரவி அதிமுகவில் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய விருப்பியதாகவும், அவர் திடீர்னு ஒரு சிக்கலில் மாட்டிகிட்டாரு. உடனடியாக கட்சியில் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட அவரு ரெடியாக இருக்காரு. நீங்க சொன்னால் அவரோட சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாக எடப்பாடியிடம் சரத்குமார் கூறியுள்ளார்.

அப்போது அதை அவசரமாக மறுத்த எடப்பாடி பழனிசாமி, ராதாரவியை தற்போது அதிமுகவில் இணைப்பது நன்றாக இருக்காது என்றும், பொள்ளாச்சி மேட்டரில்  அதிமுகவை ஏதோ பெண்களுக்கு எதிரான கட்சி என்பதை போல ஒரு தோற்றத்தை திமுக உருவாக்கிட்டு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது அவர் நயன்தாரா விவகாரத்துல மாட்டிக் கொண்டிருப்பதால் எதிர்கட்சிகள் கடுமையான  விமர்சனத்தை உருவாக்கிவிடும் என தெரிவித்துள்ளார்.


எனவே  இன்னும் 20 நாளில் எல்லாம் முடிந்துவிடும், அதுவரைக்கும் அவரை பட வேலைகளில் தொடர்ந்து கவனம் செலுத்த சொல்லுங்க. அதுக்கு பிறகு நாம தாராளமாக அவரை அதிமுகவில் சேர்த்துக்கலாம்.’ என்று கூறி அனுப்பியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!
பாஜகவை வைத்து தவெகவுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்..! திமுகவை பேயடி அடித்த விஜய்..! சீக்ரெட் பின்னணி..!