தமிழ் தமிழ் என பேசும் மோடி.. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கலாமே.. விவகாரமாக பேசும் வைரமுத்து.

By Ezhilarasan BabuFirst Published Apr 9, 2021, 2:17 PM IST
Highlights

நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன், குஜராத் மொழியை தாய்மொழியாக கொண்ட இந்திய பிரதமர் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசும் போது தமிழன் என்று என் தோள் உயர்கிறது. 

விஜிபி தமிழ் சங்கம் சார்பாக வட அமெரிக்கத் தமிழ் சங்கத்திற்கு 60 திருவள்ளூவர் சிலை அனுப்பும் விழா சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி மற்றும் கவிபேரரசு வைரமுத்து கலந்து கொண்டனர். சென்னையில் இருந்து அனுப்பி வைக்கக் கூடிய 60 திருவள்ளுவர் சிலைகளும் வட அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் இயங்கும் 60 தமிழ் சங்கங்களுக்கு சென்றடையும். 60 திருவள்ளுவர் சிலைகள் விஜிபி உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி சந்தோஷம் தலைமையில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி முன்னிலையில் வட அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து உட்பட கல்வி அமைப்பை சேர்ந்த பலர் இதில் கலந்து கொண்டனர். அப்போது கி.வீரமணி பேசியதாவது: எல்லா நாடுகளிலும் வள்ளுவரைப் படித்தால் மட்டும் போதாது தமிழ்மொழி சார்பாக வள்ளுவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே மிகவும் முக்கியமான ஒன்று. கொரோனாவில் இருந்து நிரந்தரமாக தற்காத்துக்கொள்ள தடுப்பூசி இருப்பதைப் போல பிற ஜாதி மத மொழி திணிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள திருவள்ளுவரின் தமிழ் தேவைப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மற்றும் பெரியார் ஆகியவர்கள் திருக்குறளை அச்சிட்டு அனைவருக்கும் சென்றடையும் வகையில் விநியோகம் செய்தனர். எல்லாரும் வள்ளுவத்தை வாழ்க்கை நெறியாக கொள்ள வேண்டும். திருவள்ளுவர் தினத்தை அரசு விடுமுறை ஆக்கி அந்த நாள் கொண்டாடப்பட்டது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியில்தான் என்றார்.

வைரமுத்து மேடை பேச்சு:

நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன், குஜராத் மொழியை தாய்மொழியாக கொண்ட இந்திய பிரதமர் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசும் போது தமிழன் என்று என் தோள் உயர்கிறது. திருக்குறளை உலகப்பொதுமறை என்று பிரதமர் கூறும் போது உலக தமிழ் மக்கள் ஒட்டுமொத்த மகிழ்ச்சியை அடைய நேரிடும். திருக்குறளை நேசிக்கிறீர்கள் வாசகர்கள் உச்சரிக்கிறார்கள் மகிழ்ச்சி அப்படியானால் அதே திருக்குறளை ஏன் தேசிய நூலாக ஏன் ஆணை பிறப்பிக்க கூடாது என கேட்கிறேன். இந்திய நாட்டிற்கு மயில் தேசிய பறவை, தாமரை தேசிய மலர், புலி ஒரு தேசிய விலங்கு ஆகியவை இருக்கிறது. இதை யாரும் எதிர்க்கவில்லை.

ஒரு தமிழ் மாணவன் என்கிற முறையில் ஒரு சமூக விரும்பி என்கிற முறையில் திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தால் ஒட்டுமொத்த தமிழினமும் உங்களுக்கு நன்றி கடன் பட்டு இருக்கும் என கேட்டுக் கொள்கிறேன் என அவர் மோடிக்க கோரிக்கை வைத்தார். பிரதமர் அவர்களே திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தால் நான் உங்களை நேரடியாக வந்து சந்திக்கிறேன். தமிழ் அடிகளுடன் வந்து சந்தித்து வாழ்த்துக்களை தெரிவிப்பேன். இதனால் தமிழ் சமூகம் உங்களுக்கு கடமைபட்டு இருக்கும் என கூறினார். 

 

click me!