’ரஜினிக்கு அரசியல் வகுப்பெடுக்கப்போகிறேன்...’ அதிரடியாகக் கிளம்பும் மோடி..!

Published : Apr 13, 2019, 10:15 AM IST
’ரஜினிக்கு அரசியல் வகுப்பெடுக்கப்போகிறேன்...’ அதிரடியாகக் கிளம்பும் மோடி..!

சுருக்கம்

ரஜினிகாந்த் என்னை நேரில் சந்திக்கும் போது, அவருக்கான அரசியல் ஆலோசனைகள் பற்றி பேசுவேன்” என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் என்னை நேரில் சந்திக்கும் போது, அவருக்கான அரசியல் ஆலோசனைகள் பற்றி பேசுவேன்” என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடும் தேனி தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். அதன்பின்னர் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

இந்த நிலையில் தமிழ் முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், ‘’பொதுவாக அரசியல் தொடர்பான கருத்துகளை கூறுவதற்கு ரஜினி ரொம்பவே யோசிப்பார். ஆனால் பாஜக தேர்தல் அறிக்கை குறித்து அவர் கருத்து கூறி இருப்பது மகிழ்ச்சி. மிகப்பெரிய நடிகரான ரஜினி, சாமன்ய மக்களின் தண்ணீர் பிரச்சினையை பேசி இருப்பது நல்ல விஷயம். அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்'

ரஜினிகாந்தின் பாராட்டை ஆதரவாக எடுத்துக்கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, “2013 மற்றும் 2014-ல் அவரை சந்தித்து பேசினேன். அதன் பிறகு சந்திக்கவில்லை. ரஜினிகாந்த் என்னை நேரில் சந்திக்கும் போது, அவருக்கான அரசியல் ஆலோசனைகள் பற்றி பேசுவேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே பாஜகவுக்கு ரஜினிகாந்த் மறைமுகமாக ஆதரவு தந்து கொண்டிருப்பதாக அரசியல் தலைவர்கள் சிலர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினி பாராட்டியதும், ரஜினிக்கு மோடி நன்றி தெரிவித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!