காங் ஆட்சியை கவிழ்ப்பதில் காட்டும் ஆர்வத்தை மோடி கொரோனா பணியிலும் காட்ட வேண்டும்.. பங்கம் செய்த அழகிரி.

By Ezhilarasan BabuFirst Published May 20, 2021, 10:25 AM IST
Highlights

கொரோனாவை கட்டுபடுத்துவதில் முனைப்பு காட்டாமால் காங்கிரஸ் ஆட்சியை எங்கு கவிழ்க்கலாம் என மோடி ஆர்வம் காட்டுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.  

கொரோனாவை கட்டுபடுத்துவதில் முனைப்பு காட்டாமால் காங்கிரஸ் ஆட்சியை எங்கு கவிழ்க்கலாம் என மோடி ஆர்வம் காட்டுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா நிவாரண நிதியாக தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பாக தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள் சார்பில் 25 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. 

 

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி, கொரோனா தடுப்பு பணிகளை தமிழ்நாடு அரசு மிகசிறப்பாக செய்து வருவதாக கூறினார். புதிய அரசிற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், ஆட்சிக்கு வந்த உடனே எல்லாவற்றையும் சரிசெய்து விட முடியாது எனவும் தெரிவித்த அவர், அதிமுக தற்போதைய அரசை  விமர்சிப்பதற்கான நேரம் இதுவல்ல, அவர்கள் சரியாக செய்திருந்தால் இதுபோன்ற கடினமான சூழல் வந்திருக்காது என கூறினார்.

முதல் அலை வந்த போது மத்திய அரசிற்கு புதிதாக இருந்தது, ஆனால் இப்போது கொரோனாவை கட்டுபடுத்துவதில் முனைப்பு காட்டாமால் காங்கிரஸ் ஆட்சியை எங்கு கவிழ்க்கலாம் என மோடி ஆர்வம் காட்டுவதாக குற்றம்சாட்டினார். ஏவுகணை தயாரிக்கும் போது தடுப்பூசி, ஆக்சிஜன் தயாரிக்க முடியாதா? இந்தியாவில் இதையெல்லாம் செய்ய முடியாதா? இதையெல்லாம் மோடி தவறிவிட்டார் என்றும், அதனால் தான் இவ்வளவு மரணங்கள் நிகழ்கிறது எனவும் ஆதங்கம் தெரிவித்தார்.
 

click me!