ஜெயிச்சாச்சி சவுகிதாரை தூக்கி அடிச்சாச்சி.... அதற்குள் வேலையைக் காட்டிய மோடி...

Published : May 23, 2019, 06:44 PM IST
ஜெயிச்சாச்சி சவுகிதாரை தூக்கி அடிச்சாச்சி.... அதற்குள் வேலையைக் காட்டிய மோடி...

சுருக்கம்

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்து சேர்வதற்குள் தன் பெயருக்கு முன்னால் போட்டிருந்த சவுகிதார் பட்டத்தை நீக்கி வெறும் நரேந்திரமோடியாக மாறி வேலையைக்காட்டியிருக்கிறார் பிரதமர் 2.0.

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்து சேர்வதற்குள் தன் பெயருக்கு முன்னால் போட்டிருந்த சவுகிதார் பட்டத்தை நீக்கி வெறும் நரேந்திரமோடியாக மாறி வேலையைக்காட்டியிருக்கிறார் பிரதமர் 2.0.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘சவுகிதார்’ என்ற பட்டத்தைத் தூக்கிவிட்டு அடுத்த லெவலுக்குப் போகவேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த ஸ்பிரிட்டை மனதுக்குள் ஏற்றிக்கொண்டு அடுத்த ஒவ்வொரு கணமும் இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும்.

இப்போதைக்கு இந்த சவுகிதார் பட்டம் எனது ட்விட்டர் பக்கத்தை விட்டு வெளியே போயிருக்கிறதே ஒழிய அது எனது அங்கத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. இதையே நீங்கள் அனைவரும் பின்பற்றவேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று அப்பதிவில் தெரிவித்திருக்கிறார் மோடி.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!