’மசாலா அரைச்சுக் கொடுத்தும் மனசு மாறலையே...’ ஊரை விட்டுக் கிளம்பிய மன்சூர் அலிகான்..!

By Thiraviaraj RMFirst Published May 23, 2019, 6:20 PM IST
Highlights

வாக்கு எண்ணிக்கை நாளான இன்று வரை திண்டுக்கல்லில் தங்கி இருந்த மன்சூர் அலிகான் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டதால் அங்கிருந்து சென்னைக்கு கிளம்பி விட்டார்.  

நாம் தமிழர் கட்சி சார்பின் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார் நடிகர் மன்சூர் அலிகான். இதற்காக கடந்த ஒன்றரை மாதங்களாக திண்டுக்கல் பகுதியில் தங்கியிருந்த மன்சூர் அலிகான் வித்தியாசமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவார். 

விவசாயிகளுடன் மார்கெட்டில் காய் கறி விற்பது, கரும்பு வெட்டிவது, இளநீர் வெட்டுவது, பெண்களுக்கு சமையலில் உதவி செய்ய மசாலா அறைத்துக் கொடுப்பது, குப்பை அள்ளுவது என மக்களோடு மக்களாக இறங்கி தேர்தல் பணியாற்றிய மன்சூர் அலிகான் சோசியல் மீடியாக்களில் விஐபி வேட்பாளர் அளவுக்கு கவனம் ஈர்த்தார். அவர் செருப்பு துடைத்ததும், பிரச்சாரத்தின் போது மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் வைரலானது. திண்டுக்கல் தொகுதியில் திமுக, பாமக வேட்பாளர்களை விட மக்கள் அறிந்த வேட்பாளாராக ஜொலித்தார் மன்சூர் அலிகான். ஆகையால் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

இந்த நிலையில் 30 ஆயிரத்து 672 வாக்குகளை பெற்றிருக்கிறார் மன்சூர் அலிகான். அங்கு திமுக வேட்பாளர் வேலுசாமி வெற்றி பெற்றுள்ளார். அவருக்கடுத்து பாமக வேட்பாளர் ஜோதிமுத்து 1 லட்சத்து 12 ஆயிரத்து 270 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்பிடித்துள்ளார். அமமுகவை சேர்ந்த வேட்பாளர் ஜோதி முருகன் 34 ஆயிரத்து 295 வாக்குகள் பெற்றுள்ளார். நான்காவது இடம் பிடித்துள்ள மன்சூரலிகான் 30 ஆயிரத்து 672 வாக்குகளை பெற்றுள்ளார்.  

வாக்கு எண்ணிக்கை நாளான இன்று வரை திண்டுக்கல்லில் தங்கி இருந்த மன்சூர் அலிகான் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டதால் அங்கிருந்து சென்னைக்கு கிளம்பி விட்டார். 

click me!