அவமானங்களை ஆயுதமாக மாற்றிய மோடி..! வாய்க்கொழுப்பால் காவு கொடுக்கப்படும் காங்கிரஸ்..!

Published : Sep 02, 2025, 07:12 PM IST
Modi Mother

சுருக்கம்

என் அம்மாவுக்கு அரசியலில் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் என்ன தவறு செய்தார்? அவருக்கு எதிராக ஏன் அவதூறான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன? லாலு பிரசாத்தின் கட்சி பெண்களைப் பழிவாங்க விரும்புகிறது.

‘‘லல்லு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸை நான் மன்னிக்கலாம். ஆனால் பீகார் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்’’ என தனது மறைந்த தாயாரை பற்றி அவமானப்படுத்தியதற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். பீகாரின் தர்பங்காவில் நடந்த வாக்காளர் அதிகார யாத்திரையின் போது மோடியின் மறைந்த தாயாரை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட சர்ச்சை ஏற்பட்டது.

இதுகுறித்து பேசிய அவர், ‘‘என் அம்மாவுக்கு அரசியலில் எந்த தொடர்பும் இல்லை. அவரது தவறு என்ன? அவரை ஏன் அவமதிக்கும் வார்த்தைகளால் புண்படுத்துகிறீர்கள்? ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸை நான் மன்னிக்கலாம். ஆனால் பீகார் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்’’ என மனம் வெதும்பியுள்ளார். பிரதமர் மோடியை எதிர்கட்சிகள் அவமதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. இன்று பீகார் பெண்கள் முன்னிலையில் நரேந்திர மோடி உணர்ச்சிவசப்பட்டு இதைச் சொன்ன விதம், வரவிருக்கும் பீகார் தேர்தல்களில் இது ஒரு பிரச்சினையாக மாறும். பிரதமர் மோடியை அவதூறான வார்த்தைகளால் திட்டிய போதெல்லாம், அது எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தில் காங்கிரஸ் நீண்ட காலமாக அதிகாரத்தில் இல்லை. அதிகாரத்தில் இருந்து இவ்வளவு தூரம் விலகி இருக்கும் நிலையிலும், முன்பு சோனியா காந்தி பேசியது குறித்து இப்போதும் அடிக்கடி விவாதம் நடக்கிறது. 2007 ஆம் ஆண்டில், அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரங்களுக்கு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது விமர்சனம் வைத்தார். 2007 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் பேரணியில் பேசிய சோனியா காந்தி, ‘‘குஜராத் அரசை நடத்துபவர்கள் பொய்யர்கள், நேர்மையற்றவர்கள், மரணத்தின் வியாபாரிகள்’’ என்று கூறியிருந்தார். மோடி இந்த பேச்சை காங்கிரசுக்கு எதிரான ஆயுதமாக மாற்றினார். குஜராத் தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெறுகிறது. மோடி மீண்டும் முதல்வரானார்.ஆனாலும், சோனியாவின் அந்தப் பேச்சு இன்னும் காங்கிரஸுக்கு பின்னடவை ஏற்படுத்தி வருகிறது. மோடி பிரதமரான பிறகும், காங்கிரஸ் இந்த பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

2014 மக்களவைத் தேர்தலில், மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருந்தார். அவர் குஜராத்தில் இருந்து டெல்லிக்கு வந்திருந்தார். இந்தத் தேர்தலின் போது, ​​காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் பேசியது தேர்தல் முழுவதும் விவாதிக்கப்பட்டது. மணிசங்கர் அய்யர் மோடியை ஒரு ‘சாய்வாலா’ என்று கூறினார். மோடி இந்த வார்த்தையை ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு தேர்தல் மேடையிலும் தன்னை ஒரு சாய்வாலா என்று பெருமையாக கூற ஆரம்பித்தார். இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. பாஜக முதல் முறையாக ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. ஆனாலும், இது கடைசி முறை அல்ல. மணிசங்கர் மீண்டும் பிரதமர் மோடியை கீழ்த்தரமானவர் எனக்கூறினார்.

அரசியலில் வார்த்தைகள் எப்போதும் முக்கியமானவை. அது எதிர்காலத்திலும் அப்படியே இருக்கும். தேர்தல் வெற்றியில் தேர்தல் முழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அது தோல்வியடைந்தால், சர்வ நாசம்தான். 2019 மக்களவைத் தேர்தலிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , மோடியை ‘சவுக்கிதார் சோர் ஹை’ என்ற வார்த்தையை விட்டபோதும் இதுவே நடந்தது. 2014-2019 வரை மோடி பிரதமராக இருந்த ஐந்து ஆண்டுகளில், அவர், அவரது அமைச்சர்கள் யாரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகவில்லை. ஆனாலும், 2019 தேர்தலில், ராகுல் காந்தி ரஃபேல் விவகாரத்தை எழுப்பி 'சவுகிதார் சோர் ஹை' என்ற முழக்கத்தை எழுப்பினார்.

பிரதமர் மோடியும் இந்த முழக்கத்தை தனக்கு ஆதரவாகப் பயன்படுத்தினார். அந்த நேரத்தில், அவர் தனது ட்விட்டர் கணக்கை 'சவுகிதார் நரேந்திர மோடி' என்று மாற்றினார். சிறிது நேரத்தில், 'மைன் பி சவுகிதார்' என்பது மீண்டும் ட்ரெண்டிங் ஆனது. தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், மோடி மீண்டும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். பிரதமர் மோடிக்கு எதிரான ராகுல் காந்தியின் முழக்கம் பொதுமக்களுக்கு எதிர்மறையான முழக்கமாகத் தோன்றியது. இந்த முழக்கத்தின் மீது பொதுமக்கள் மிகவும் கோபமாக இருப்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.

இன்று பேசிய மோடி, ‘‘என் அம்மாவுக்கு அரசியலில் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் என்ன தவறு செய்தார்? அவருக்கு எதிராக ஏன் அவதூறான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன? லாலு பிரசாத்தின் கட்சி பெண்களைப் பழிவாங்க விரும்புகிறது. ஏனென்றால் அவர்களால்தான் பீகாரில் அவரது அரசு அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. தாய்மார்களைத் துன்புறுத்துபவர்கள், பெண்களை பலவீனமானவர்கள் என்று நினைக்கிறார்கள். என் தாயை துஷ்பிரயோகம் செய்வது பீகாரின் மகள்கள், சகோதரிகளுக்கு அவமானம்’’ என பேசினார்.

பீகார் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். இந்தப் பிரச்சினை எதிர்க்கட்சிகளை எவ்வளவு பாதிக்கிறது என்கிற உண்மை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் தெரியும். ஆனாலும் மோடியின் தாயாரை அவமதித்தது நிச்சயமாக தேர்தலில் காங்கிரஸ்- ஆர்ஜேடிக்கு ஒரு பிரச்சினையாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை