
பிரதமர் மோடியின் வசீகரம் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டனுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள நாடுகளில் ஆழமாகப் பதிந்து வருகிறது. இப்போது சீனாவிலும் தலைவர் மாஸ் காட்டி இருக்கிறார். பிரதமர் மோடி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போதிருந்து, பிரதமர் மோடி சீன சமூக ஊடகங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அங்கு ட்விட்டர் என்று அழைக்கப்படும் Weibo-வில் அவரைப் பற்றி மட்டுமே பேசி சிலாகித்து வருகிறார்கள்.
சீனா சென்றுள்ள மோடிக்கு சீனாவின் மதிப்புமிக்க Made in China Hongqi கார் வழங்கப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தனது அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணங்களில் இந்த காரைப் பயன்படுத்துகிறார். இது தவிர, மிகவும் சுவாரஸ்யமான விஷயம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பிரதமர் மோடியும் ஒரே காரில் மாநாட்டிற்கு சென்றனர். இந்த கார் ஒரு ஆரஸ் கார். இது புதின் செல்ல வழங்கப்பட்ட கார். இது சீன இராஜதந்திர நம்பர் பிளேட் கொண்டது.
சீன அதிபர் பயன்படுத்தும் ஹாங்கி எல்-5 கார். மாண்டரின் மொழியில் "சிவப்புக் கொடி" என்று பொருள்படும் வகையில் பெயரிடப்பட்ட இந்த கார், சீனாவில் பெருமைக்குரியதாகவும், அரசியல் அடையாளமாகவும் கருதப்படுகிறது. 1958ஆம் ஆண்டு சீன அரசுக்குச் சொந்தமான ஃபர்ஸ்ட் ஆட்டோமோட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனத்தால் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பொறுப்பில் இருப்பவர்களுக்காக ஹாங்கி கார்கள் உருவாக்கப்பட்டன.
அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் கேடிலாக் நிறுவனத்தின் பீஸ்ட் ரக காருக்கு இணையாக ஹாங்கி கார்கள் சீனாவில் கருதப்படுகிறது. 5 புள்ளி 5 மீட்டருக்கும் மேல் நீளம் மற்றும் மூன்று டன்களுக்கு மேல் எடை கொண்ட ஹாங்கியின் எல்-5 ரக கார் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், தகவல் தொடர்பு அமைப்புகளை கொண்டுள்ளது. சீன அதிபர் ஜிங்பிங் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஹாங்கி எல் - 5 கார்களை பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு சீனா சென்ற பிரதமர் மோடியின் பயணத்திற்கு ஹாங்கி எல்-5 கார் அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி, புடினுக்கு வழங்கப்பட்ட காரில் அமர்ந்தபோது, அவர் சீன 'ட்விட்டர்' வெய்போவில் டிரெண்டிங்கில் இடம்பிடிக்கத் தொடங்கினார். இது தற்போது வெய்போவில் முதலிடத்தில் உள்ளது. இது தவிர, சீன தேடுபொறியான பைடுவில் அதிகம் தேடப்பட்ட டிரெண்டிலும் பிரதமர் மோடி உள்ளார். 'மோடியும் புதினும் கட்டிப்பிடித்து கைகோர்த்து பேசினார்கள்', இது பைடுவில் டாப் டிரெண்ட். சீன மக்கள் அவர்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.