மோடி பதவியேற்றதை டி.வி. யில் பார்த்து ரசித்த அவரது தாய் !! கை தட்டி மகிழ்ச்சி !!

Published : May 30, 2019, 11:52 PM IST
மோடி பதவியேற்றதை டி.வி. யில் பார்த்து ரசித்த அவரது தாய் !!  கை தட்டி மகிழ்ச்சி !!

சுருக்கம்

குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை,  குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள வீட்டிலிருந்து டி.வி.யில் மோடியின் தாயார் ஹீரா பென். பார்த்து கைதட்டி ரசித்தார்.   

17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. 

பாரதீய ஜனதா மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. என்றாலும் கடந்த 2014-ம் ஆண்டு தனித்து ஆட்சியை பிடித்த போது கூட்டணி கட்சிகளையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டதை போல், இந்த முறையும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.

இதையடுத்து நாடாளுமன்ற பாஜக  தலைவராக (பிரதமர்) தேர்ந்து எடுக்கப்பட்ட மோடிக்கு, புதிய பிரதமராக பதவி ஏற்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் உள்ள முற்றத்தில்  மோடி பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். விழாவில் மோடிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

குடியரசு தலைவர் மாளிகையில் மோடி பிரதமராக பதவியேற்றதை குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள வீட்டிலிருந்து டி.வி.யில் மோடியின் தாயார் ஹீரா பென் பார்த்து கைதட்டி ரசித்தார். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!