தாயின் கண்ணீரைத் துடைத்த ஜெகன் மோகன் ரெட்டி !! பதவி ஏற்பு விழாவில் நெகிழ்ச்சி சம்பவம் !!

Published : May 30, 2019, 10:27 PM IST
தாயின் கண்ணீரைத் துடைத்த ஜெகன் மோகன் ரெட்டி !! பதவி ஏற்பு விழாவில் நெகிழ்ச்சி சம்பவம் !!

சுருக்கம்

ஆந்திர பிரதேச முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவி ஏற்றுக் கொண்டபோது கதறி அழுத தனது தாயின் கண்ணீரை துடைத்துவிட்டு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் மேடையில் இருந்தவர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.   

ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது.  இதனை தொடர்ந்து ஆந்திர பிரதேச முதலலமைச்சராக அவர் இன்று முறைப்படி பதவியேற்று கொண்டார்.  அவருக்கு ஆளுனர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதன்பிறகு நடந்த மதிய விருந்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பின் முதன்முறையாக பேசிய  ஜெகன், ஆந்திர பிரதேச அரசு நிர்வாகத்தில் இருந்து ஊழலை வேருடன் ஒழிப்பேன் என உறுதி கூறினார்.  இந்த நிகழ்ச்சிகளை ஜெகனின் தாயார் ஒய்.எஸ். விஜயம்மா தீவிரமுடன் கவனித்தார்.  இதன்பின் அவரை நோக்கி நடந்து சென்ற ஜெகன் தாயாரின் ஆசியை பெற்றார்.

இதன்பின் தனது மகனை கட்டிப்பிடித்து அவரது தாயார் கதறி அழுது விட்டார்.  அவரது கண்ணீரை துடைத்து விட்டு ஜெகன் ஆறுதல் கூறினார்.  கடந்த 2009ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உயிரிழந்து விட்டார்.  

இதன்பின் பல சோதனைகளை கடந்த ஜெகன் இன்று முதலமைச்சராக  பதவியேற்று கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின் முஸ்லிம், கிறிஸ்துவ மற்றும் இந்து மத சாமியார்களிடம் ஜெகன் மோகன் ஆசி பெற்று கொண்டார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு