சமூக வலை தளங்களில் பிரதமர் மோடியின் நிலை என்ன ? கருத்துக் கணிப்பில் அதிரடி முடிவு !!

Published : Feb 21, 2019, 08:42 AM ISTUpdated : Feb 21, 2019, 09:19 AM IST
சமூக வலை தளங்களில் பிரதமர் மோடியின் நிலை என்ன ? கருத்துக்  கணிப்பில் அதிரடி முடிவு !!

சுருக்கம்

கடந்த 2014 ஆம் ஆண்டு  ஊடகங்களும், சமூக வலை தளங்களும் எந்த அளவுக்கு பிரதமர் மோடிக்கு பலத்த ஆதரவைத் தந்தனவோஇ தற்போது அது தலைகீழாக மாறிப் போயுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மோடிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது, தனியார் செய்தி ஊடகங்களைத் தாண்டி, ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களையும் மிகப்பெரிய ஆயுதமாக பாஜக பயன்படுத்தியது.

ஆனால், பாஜக கையிலெடுத்த இந்த ஆயுதங்களே வரும்  2019 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக-வுக்கே எதிராக திரும்பிக் கொண்டிருக்கின்றன.குறிப்பாக, 2014-இல் மோடியைத் தாங்கிப் பிடித்த, ட்விட்டர் வாசிகள், தற்போது மோடி என்றாலே, கடுமையாக விமர்சிக் கின்றனர். 

கறுப்புப் பண ஒழிப்பு, தீவிரவாத ஒழிப்பு, 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, , வங்கிக் கணக்கில்ரூ. 15 லட்சம்  போன்ற பிரதமரின் பல வாக்குறுதிகளை டுவிட்டர்வாசிகள்  நினைவுபடுத்தி, மீம்ஸ் போட்டு கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர். இதே போல் மோடி செல்லும் மாநிலங்களில், ‘கோ பேக் மோடி’என்ற ஹேஷ்டேக், உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

மேலும், டுவிட்டரில் மோடியைப் பின்தொடர்ந்த பல லட்சம் பேர், தற்போது அவரை விட்டு விலகியுள்ளனர்.இந்நிலையில், மோடிக்கு இருக்கும் செல்வாக்கை சோதித்துப் பார்க்கும் வகையில், ‘டைம்ஸ் நவ்’, ‘ரிபப்ளிக் டிவி’ ஆகிய பாஜக ஆதரவு ஊடகங் களே டுவிட்டரில் கருத்துக் கணிப்புக்களை அண்மையில் நடத்தின. 

ஆனால், அவற்றிலும் மோடிக்கு கடும் சரிவு ஏற்பட்டுள்ளது..பாஜக ஆதரவு தொலைக்காட்சியான ‘டைம்ஸ் நவ்’, ட்விட்டரில் மோடி குறித்து ஒரு வாக்கெடுப்பை நடத்தியுள்ளது. அதாவது, மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் நீங்கள் பயனடைந்தீர்களா? என்று அது வாசகர்களிடம் கேள்வி எழுப்பி இருந்தது.


அதற்கு, 85 சதவிகித டுவிட்டர் வாசிகள், “இல்லை” என்றே வாக்களித்துள்ளனர். அதேபோல மோடியை, பிரியங்கா காந்தியால் எதிர்கொள்ள முடியுமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கும், 60 சதவிகிதம் பேர் “முடியும்” என்று வாக்களித்து, அதிர்ச்சி அளித்துள்ளனர்.

மற்றொரு பாஜக ஆதரவு ஊடகமாக, அர்னாப் கோஸ்வாமியின், ‘ரிபப்ளிக் டிவி’-யும், “55 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை விட, 55 மாதம் ஆட்சி செய்த மோடி மக்களுக்குஅதிகம் செய்துவிட்டாரா?” என்று டுவிட்டரில்கேட்டுள்ளது. 

இதற்கும் 56 சதவித டுவிட்டர்வாசிகள் “இல்லை” என்றே கூறியுள்ளனர்.இவ்விரு தனியார் செய்தி ஊடகங் களைத் தவிர, பாஜக ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான அக்னிஹோத்ரியும், டுவிட்டரில் தன்னைப் பின்பற்றக்கூடிய 1 லட்சத்து 40 ஆயிரம் பேரிடம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளார்.

“நரேந்திர மோடிக்கும், ராகுல் காந்திக்கும் விவாதம் நடந்தால், ராகுலுக்கு எவ்வளவு மதிப்பெண் தருவீர்கள்?” என்பதுதான் அவரது கேள்வி. அதற்கு ராகுலுக்கு 100 மதிப்பெண்கள் தருவோம் என்று 56 சதவிகிதம் வாக்களித்து, அக்னி ஹோத்ரிக்கே அதிர்ச்சி அளித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களால் ஊதிப்பெருக்கப்பட்ட மோடி பிம்பம், அதே சமூகவலைத்தளங்கள் மூலமாக உடைந்து நொறுங்குவதைக் கண்டு, பாஜக-வினர் கலக்கம் அடைந்துள்ளனர்..

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!