திமுகவா ? அதிமுகவா ? தவியாய் தவிக்கும் ஜி.கே.வாசன் !!

By Selvanayagam PFirst Published Feb 21, 2019, 8:01 AM IST
Highlights

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதா ? அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதா ? என முடிவு எடுக்க முடியாமல் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்றவை இடம் பெற்றுள்ளன.

அதிமுக கூட்டணியில்  பாஜக, பாமக மற்றும் சில உதிரிக்கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த கூட்டணியில் தேமுதிகவை இணைத்துக் கொள்வது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரசில் இருந்து பிரிந்து  தனிக்கட்சி நடத்தி வரும் வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து முடிவு எடுக்காமல் இருக்கிறது. 

இந்நிலையில் கூட்டணி குறித்து, த.மா.கா., தலைவர், வாசனுடன், நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் , தொலைபேசியில் பேசிய தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.க, - பா.ம.க., சேர்ந்துள்ள நிலையில்  கூட்டணியை மேலும் வலிமையாக்க, தே.மு.தி.க., - த.மா.கா.,வுடன் பேசப்பட்டு வருகிறது. இதில், த.மா.கா.,வை சேர்ப்பதன் வாயிலாக, காங்கிரசை பலவீனப்படுத்த முடியும் என, அ.தி.மு.க., மேலிடம் கருதுகிறது.

த.மா.கா., சார்பில், மூன்று தொகுதிகள் கேட்கப்படுகின்றன. மயிலாடு துறை, பெரம்பலுார், நீலகிரி, ஈரோடு, மதுரை, நெல்லை ஆகியவற்றில் இருந்து, மூன்று தொகுதிகளை ஒதுக்க, த.மா.கா., கோரியுள்ளது.

ஆனால், த.மா.கா.,வுக்கு, இரண்டு தொகுதிகளை மட்டும் ஒதுக்கீடு செய்ய, அ.தி.மு.க., விரும்புகிறது. இதற்கிடையில், தி.மு.க.,விடமும், த.மா.கா., தரப்பில் பேசப்பட்டு உள்ளது. இரண்டு லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா, எம்.பி., பதவியும் கேட்டு, வாசன் தரப்பில் துாது அனுப்பி உள்ளனர். ஆனால், ஒரு தொகுதி மட்டுமே தருவதாக, தி.மு.க., கூறியுள்ளது.

இதனையடுத்து  அதிமுக அல்லது திமுக யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என முடிவு எடுக்க முடியாமல் வாசம் திணறி வருகிறார், அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருப்பதால் அதில் இணைய அவர் யோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

click me!