டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டார் மோடி.. ஆளுனர், முதல்வர், துணை முதலவர் வரவேற்க உள்ளனர்.

By Ezhilarasan BabuFirst Published Feb 14, 2021, 10:23 AM IST
Highlights

காலை 10:30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகைதரும் அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் அமைச்சர்கள் வரவேற்பு அளிக்கின்றனர் 

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை புறப்பட்டார். தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார், அதற்காக இன்று காலை 8 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.

காலை 10:30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகைதரும் அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் அமைச்சர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். பிரதமர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது, சுமார் மூன்றரை மணி நேரம் சென்னையில் அவர் இருக்க உள்ள நிலையில் 5 மணி நேர போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பின்னர் நிகழ்ச்சி முடித்து அவர் 12:30 மணி அளவில் கேரளா புறப்பட உள்ளார்.  பிரதமர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளதால் அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணி என்று இறுதி செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் பிரதமர் மோடி சில அரசியல்  முக்கிய துவம் வாய்ந்த அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாகவும்  கூறப்படுகிறது, பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ளார் 10:30 மணிக்கு விமான நிலையம் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறுக்கு சென்று அங்கிருந்து கார் மூலம் நேரு ஸ்டேடியம் வரவுள்ளார். 

 

12 மணி அளவில் சென்னை மெட்ரோ ரயில் வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வழி தடத்தை தொடங்கி வைக்கும் அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார், மீண்டும் 1 மணி அடையாறு விமான தளத்தை அடைந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையம் செல்கிறார்.  இந்நிலையில் பிரதமர் தரை மார்க்கமாக பெரியமேடு நேரு ஸ்டேடியத்திற்கு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவரை வரவேற்க 1 லட்சம் பஜக தொண்டர்கள் நேப்பியர் பாலம் முதல் நேரு ஸ்டேடியம் வரை திரண்டு வரவேற்பு அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!