ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 4 லட்சம் கோடிக்கு பணிகள் நிறைவு. மத்திய நகர்ப்புற விவகாரத்துறை செயலர் தகவல்.

Published : Feb 14, 2021, 10:03 AM IST
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 4 லட்சம் கோடிக்கு பணிகள் நிறைவு. மத்திய  நகர்ப்புற விவகாரத்துறை செயலர் தகவல்.

சுருக்கம்

11 நகரங்களில் உள்ள மக்களுக்கு நாள்தோறும் 135 லிட்டர் வழங்கப்பட்டு வருகிறது 12 நகரங்களில் உள்ள மக்களுக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை நகரில் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் பல்வேறு நடிகைகள் ஸ்மார்ட் சிட்டி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை நான் பார்வையிட்டேன், இந்த கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் நகரத்திலுள்ள அனைத்து பணிகளையும் செயல்படுத்துதல் மற்றும் கண்காணிக்க முடியும் இது இந்த நகரின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உதாரணமாக மழை வெள்ள பாதிப்புகளை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு மற்றும் நீர் மட்ட அளவு மற்றும் அதை வெளியேறும் விதம் உள்ளிட்டவற்றை கண்காணிக்கப்படுகிறது, 

இவை மட்டுமல்லாது இந்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் நகரில் போக்குவரத்து நெரிசல் மக்கள் நெரிசல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெறமுடியும். இதன்மூலம் சென்னை நகர மக்களுக்கு சிறப்பான பயன்களை அடைய இது வழிவகை செய்கிறது, இதுபோன்ற தமிழகத்தில் மேலும் 10 நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படவுள்ளது, நாட்டிலேயே உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு நகரமயமாக்கல் அதிகமாக உள்ள மாநிலமாகும் 2011 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 50 சதவீதம் நகரமயமாகி உள்ளது இது அடுத்த 2 ஆண்டுகளில் இந்த சதவீதமானவை மேலும் அதிகரிக்கும். 

மக்களுக்கு குடியிருக்க வீடு மற்றும் சுகாதாரமான குடிநீர் வீட்டுவசதி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் தமிழகத்திற்கு அதிகம் வழங்கப்பட்டுள்ளது, கடந்த ஆறு வருடங்களில் தமிழகத்தில் 1.6 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன, அம்ருத் திட்டத்தின் மூலம் 12 லட்சம் கோடி ரூபாய் சுத்தமான குடிநீர், கழிவுநீர் அகற்றுதல் பாதாள சாக்கடை திட்டம் பசுமையாக்கும் நடவடிக்கை உள்ளிட்டவற்றுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது, 

11 நகரங்களில் உள்ள மக்களுக்கு நாள்தோறும் 135 லிட்டர் வழங்கப்பட்டு வருகிறது 12 நகரங்களில் உள்ள மக்களுக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை நகரில் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் பல்வேறு நடிகைகள் ஸ்மார்ட் சிட்டி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை நாளை தான் ஆய்வு செய்ததாகவும் தெரிவித்தார். 12 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஸ்மார்ட்சிட்டி திட்டங்களுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது,  நாலு லட்சம் கோடி ரூபாய் அதற்கான பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது, 

தற்போது சென்னையில் பாண்டிபஜாரில் செயல்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் மக்களுக்கு மிகுந்த பயனை அளித்துள்ளது.  இதன் மூலம் எளிதாக நடைப்பயிற்சி செய்தல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டமானது பயனுள்ளதாக உள்ளது. மேலும் கோவை மற்றும் சேலத்திற்கு இந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்  அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிகுந்த பயனளிக்கும் இதுபோன்ற ஸ்மார்ட்சிட்டி திட்டங்களின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் இதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளும் உயரும் இதன்மூலம் அந்தரங்க பகுதியில் வசிக்கக்கூடிய மக்களின் வாழ்வாதார செயல்பாடுகள் மேம்பாடு அடையும் என தெரிவித்துள்ளார். 

 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!