4486 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் மோடி. தமிழகத்தில் ஆழமாக காலூன்றும் பாஜக.

By Ezhilarasan BabuFirst Published Feb 14, 2021, 12:27 PM IST
Highlights

3770 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம், மற்றும்  ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் போர் பீரங்கி ராணுவத்திற்கு வழங்குதல்,  228 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்ட ஒரு வழியை ரயில்பாதை போன்ற மக்கள் நல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  


3770 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம், மற்றும்  ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் போர் பீரங்கி ராணுவத்திற்கு வழங்குதல்,  228 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்ட ஒரு வழியை ரயில்பாதை போன்ற மக்கள் நல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது, இதனால் முக்கிய கட்சிகள் தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் இறங்கியுள்ளன, தமிழகத்தில் வலுவாக காலூன்ற வேண்டும் என்பது பாஜகவின் நெடுநாளைய ஆசை, வரும் தேர்தலை அதிமுக உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது பாஜக, முன்னோட்டமாக சில மாதங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார், இந்நிலையில் ஒரு நாள் அரசு முறை பயணமாக இன்று தமிழகம் வருகை தந்த பிரதமர், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். 

இதில் வண்ணாரப்பேட்டை விம்கோ நகர் இடையே 3770 கோடி செலவில்  நிறைவேற்றப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார், மேலும் விழுப்புரம்-கடலூர்,  மயிலாடுதுறை-தஞ்சை மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் இடையே 228 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்ட ஒரு வழியை ரயில்பாதை ஆகியவை உட்பட பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். கல்லணை கால்வாய் விரிவாக்கம் புதுப்பிப்பு மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்திற்கும், சென்னை அடுத்த தையூரில்  2 லட்சம் சதுர மீட்டரில் ரூபாய் 1000 கோடி செலவில்  ஐஐடிக்காக  அமைக்கப்படவுள்ள டிஸ்கவரி கேம்பஸ் வளாகத்திற்கும்  அவர் அடிக்கல் நாட்டினார், 

மேலும் சென்னை ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் போர் பீரங்கியை இந்திய ராணுவத்திற்கு அவர் அர்ப்பணித்தார். இதன் மூலம் தமிழகத்தில் வலுவாக காலூன்ற வேண்டும் என்ற பாஜகவின் திட்டம் மெல்ல மெல்ல ஈடேறிவருகிறது என்று கூறலாம்.  

 

click me!