பாரத தேசத்தின் பாதுகாவலர், பாமரர்களின் சேவகர்.. மோடியை புகழ்ந்த துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்.

Published : Feb 14, 2021, 12:06 PM IST
பாரத தேசத்தின் பாதுகாவலர், பாமரர்களின் சேவகர்.. மோடியை புகழ்ந்த துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்.

சுருக்கம்

அறிவாற்றல் மிக்க தமிழக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி அவர்களே வருக வருக என வரவேற்கிறேன், பாரத தேசத்தின் பாதுகாவலர், பாமரர்களின் சேவகர்  

பாரத தேசத்தின் பாதுகாவலர், பாமரர்களின் சேவகர் என பிரதமர் மோடியை  துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் புகழ்ந்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது, இதனால் முக்கிய கட்சிகள் தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் இறங்கியுள்ளன, தமிழகத்தில் வலுவாக காலூன்ற வேண்டும் என்பது பாஜகவின் நெடுநாளைய ஆசை, வரும் தேர்தலை அதிமுக உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது பாஜக, முன்னோட்டமாக சில மாதங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார், இந்நிலையில் ஒரு நாள் அரசு முறை பயணமாக இன்று தமிழகம் வருகை தந்த பிரதமர், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். 

அதற்காக நேரு விளையாட்டு உள்ளரங்க வந்தார், பிரதமர் மோடி மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள், எம்ஜிஆர், செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின்  உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொன்னாடை போர்த்தி வரவேற்றார், அப்போது பிரதமருக்கு நினைவு பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக தமிழக முதலமைச்சர் பிரதமர் மோடி கிருஷ்ணர் சிலை வழங்கினார் அதேபோல துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு தட்சிணாமூர்த்தி சிலை வழங்கினார். அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்புரையாற்றானார். அப்போது அவர் பேசியதாவது: இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

அறிவாற்றல் மிக்க தமிழக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி அவர்களே வருக வருக என வரவேற்கிறேன், பாரத தேசத்தின் பாதுகாவலர், பாமரர்களின் சேவகர் பிரதமர் மோடி தமிழகத்திற்கு முக்கிய இரண்டு ரயில் திட்டங்களை கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்க திறமை எங்கு இருந்தாலும் அதைப் பாராட்ட தவறாதவர் பிரதமர் பாரதத்தாயின் நேர்மையான புதல்வர் இவ்வாறு அவர் பேசினார்.
 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!