
கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, பிரதமர் நரேந்திர ஒரு கார்ப்பரேட் சேல்ஸ்மேன் என கடுடையாக தாக்கிப் பேசியுள்ளார். இது குறித்து கர்ந்டக மாநில பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மே 12-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கும் கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன.அங்கு பா.ஜனதாவிற்கு எதிராக குஜராத் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேக்வானியும் பிரசாரம் செய்கிறார். நடிகர் பிரகாஷ் ராஜும் பாரதீய ஜனதா மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பெங்கஞளுருவில் நேற்று தேர்தல் பிரச்சராம் மேற்கொண்ட ஜிக்னேஷ் மேவானியும். நடிகர் பிரகாஷ் ராஜும், பிரதமர் நரேந்திர மோடியை ‘கார்பரேட் சேல்ஸ்மேன்’ நாட்டை கொள்ளையடிக்கும் திருடன் என அழைத்தனர். இவர்களின் இந்த கடுமையான பேசிசு அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மற்றும் எடியூரப்பா ஆகியோரை அவதூறு செய்யும் வகையில் பேசியதாக ஜிக்னேஷ் மற்றும் பிரகாஷ் ராஜ் மீது பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு மாநில பா.ஜனதா எழுதி உள்ள புகார் கடிதத்தில் “பெங்களூருவில் ஜிக்னேஷ் மேக்வானி பிரசாரம் செய்த போது பிரதமர் மோடியை ‘கார்பரேட் சேல்ஸ்மேன்’ நாட்டை கொள்ளையடிக்கும் திருடன் என அழைத்தார்,” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி மற்றும் எடியூரப்பாவிற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் மேத்வானியும், பிரகாஷ் ராஜும் பேசிவருகிறார்கள் என பாரதீய ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் எந்தவகையிலும் பிரசாரம் செய்வதற்கு அனுமதி வழங்க கூடாது எனவும் தேர்தல் ஆணையத்திடம் பாரதீய ஜனதா கோரிக்கை விடுத்து உள்ளது.