மோடி பேச்சுடன் இன்று தொடங்குகிறது முதலமைச்சர்கள் மாநாடு….டெல்லி புறப்பட்டுச் சென்றார் இபிஎஸ்..

Asianet News Tamil  
Published : May 02, 2018, 08:15 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
மோடி பேச்சுடன் இன்று தொடங்குகிறது முதலமைச்சர்கள் மாநாடு….டெல்லி புறப்பட்டுச் சென்றார் இபிஎஸ்..

சுருக்கம்

today cM conference in delhi EPS went ot delhi

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள முதலமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்  பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி வரை ஓர் ஆண்டு காலம் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாடவும், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவும் மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடுவது தொடர்பாகவும், திட்டங்களை வகுப்பது தொடர்பாகவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு பரிந்துரைக்கும் திட்டங்களை மத்திய அரசு பரிசீலித்து நிறைவேற்றும்.

இந்த குழுவில் முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், தேவேகவுடா, மன்மோகன் சிங், முன்னாள் துணை பிரதமர் அத்வானி, மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற சபாநாயகர், மாநில முதல்-மந்திரிகள் என 114 பேர் இடம்பெற்று உள்ளனர்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகாஜூன கார்கே அமித்ஷா ,முலாயம் சிங் சரத்பவார் சீதாராம் யெச்சூரி , சுதாகர் ரெட்டி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கிறார்கள்.

இந்த குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

இதற்காக அவர் இன்று காலை 6 மணிக்கு விமானம் மூலம் டெல்லி  புறப்பட்டுச்சென்றார். அங்கு  தமிழ்நாடு இல்லத்துக்கு செல்லும் இபிஎஸ், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஆஜராகி வாதாடும் வக்கீல்கள் குழுவினரை சந்தித்து பேசுகிறார்.

பின்னர் மாலை 5 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெறும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா தொடர்பான கூட்டத்தில் பங்கேற்கிறார். அவர், டெல்லியில் இருக்கும் போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினை தொடர்பாகவும், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை அவர் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்ப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

காப்பி அடிக்கிறாங்க மிஸ்.. இன்னும் நல்லா கதறுங்க.. திமுகவை கலாய்த்து பதிலடி கொடுத்த அதிமுக!
பொங்கல் விழாவில் அரசியல் பேசாதீங்க.. மேடையில் அவமானப்பட்ட தவெக தலைவர்.. என்ன நடந்தது?