மோடி இப்போ எங்க கெஸ்ட்.. !! எதிர்கட்சிகளை அலறவிட்ட ஆர்.எஸ்.பாரதி. ஆடிப்போன அண்ணாமலை.

Published : Dec 27, 2021, 11:06 AM IST
மோடி இப்போ எங்க கெஸ்ட்.. !! எதிர்கட்சிகளை அலறவிட்ட ஆர்.எஸ்.பாரதி. ஆடிப்போன அண்ணாமலை.

சுருக்கம்

பத்தாண்டுகள் பிறகு திமுக ஆட்சி  பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் அரசு கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.  கொரோனா காலத்தில் அரசு செயல்பட்ட விதம் மற்றும் மழை வெள்ளத்தின் போது முதல்வர் உட்பட அரசு இயந்திரம் களத்தில் இறங்கி செயலாற்றியது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பிரதமர் மோடி எங்களுக்கு எதிரியே அல்ல, இந்துத்துவா தான் எங்களுக்கு எதிரி. எனவே தமிழகம் வருகின்ற பிரதமரை நாங்கள் வரவேற்கிறோம், அவர் இப்போது எங்களுக்கு " கெஸ்ட் " எனவே அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார். உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கை கொடுப்போம் என்ற முறையில்தான் திமுக பாஜகவையும், மோடியையும் அணுகுகிறது என அவர் கூறியுள்ளார்.

பத்தாண்டுகள் பிறகு திமுக ஆட்சி  பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் அரசு கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.  கொரோனா காலத்தில் அரசு செயல்பட்ட விதம் மற்றும் மழை வெள்ளத்தின் போது முதல்வர் உட்பட அரசு இயந்திரம் களத்தில் இறங்கி செயலாற்றியது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளானா அதிமுக, பாஜகவோ, அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக என விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுகவைவிட ஒரு படி மேலே போய் பாஜக திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. சட்டமன்றத்தில் அதிமுக எதிர்க்கட்சி என்றாலும்கூட மக்கள் மன்றத்தில் பாஜகதான் எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவுக்கென்று தனித்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில்தான் திமுகவை பாஜக இந்த அளவுக்கு கடுமையாக விமர்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக தொடர்ந்து திமுகவை விமர்சித்து வரும் யூடியூபர் மாரிதாஸ் பாஜகவைச் சார்ந்த கல்யாணராமன் போன்றோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை திமுகவும் பாஜகவுக்கு இடையேயான மோதலை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில்தான் பாரதப் பிரதமர் மோடி ஜனவரி 12ஆம் தேதி தமிழகத்துக்கு வருகை தர உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜனவரி 12-ஆம் தேதி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். எனவே 12ஆம் தேதி பிரதமர் விமானம் மூலம் சென்னை வர இருக்கிறார். அதில் மாநில முதலமைச்சர் மு. க ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளார். தமிழக அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நிலையில் அவர் வருகை அமைய உள்ளது. இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதாவது திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அப்போது தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியதுடன், Go Back மோடி என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது.  நாட்டின் பிரதமர் என்றும் பாராமல் திமுக அரசியல் உள்நோக்கத்துடன் இப்படி நடந்து கொள்கிறது என்றும் பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்தன. அதாவது திருவிடந்தயில் ராணுவ தளவாட கண்காட்சி தொடக்கவிழா மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழாவில் பங்கேற்பதற்காக கடந்த இரண்டாயிரத்து பதினெட்டு ஏப்ரல் 13ஆம் தேதி பிரதமர் மோடி விமானம் மூலம் சென்னை வருகை தந்தார். சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி  காட்டப்படும் என திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்தன. அதனடிப்படையில் சென்னையில் மொத்தம் 29 இடங்களில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பாக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடந்தது.

சென்னை விமான நிலையத்திலிருந்து பிரதமர் கிண்டி அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகம் வரும்வரையில் வழி நெடுக தமிழர் வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக என பல்வேறு கட்சியினர் கருப்பு கொடி போராட்டத்தில் இறங்கின. இந்தப் போராட்டத்தின் காரணமாக பிரதமர் மோடி சாலை மார்க்கமாக பயணத்தை தவிர்த்து ஆகாய மார்கமாக பயணத்தை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். எனவே அவர் சென்னை விமான நிலையத்திலிருந்து திருவிடந்தைக்கு ஹெலிகாப்டர் மூலமாக பயணித்தார். ஆனால் ஆகாய மார்கமாக பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டது நாட்டின் பிரதமரே சாலை மார்க்கமாக பயணிக்க முடியாத நிலையை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உருவாக்கினர். இது அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் திமுகவை கடுமையாக விமர்சித்தன தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். அவரை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திமுக அரசு செய்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு  பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அதன் நெறியாளர் தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு திமுக கருப்புக்கொடி காட்டுமா? என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், 

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு திமுக ஏன் கருப்புக்கொடி காட்ட வேண்டும்? எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் அவருக்கு கருப்புக்கொடி காட்டினோம், ஆனால் இப்போது நாங்கள் அவரை விருந்தினராக அழைத்திருக்கிறோம். அவர் தமிழகத்தின் விருந்தினராக வருகிறார். நாங்களே அழைத்துவிட்டு நாங்களே கருப்புக்கொடி காட்டினால் அது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும். தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக அவர்களை நாங்கள் அழைத்திருக்கிறோம். அதன் அடிப்படையில் அவர் வரவுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் நாங்கள் எப்படி அவருக்கு கருப்புக்கொடி காட்ட முடியும்? எங்களுக்கு எதிராக அவர் ஏதாவது பேசியிருந்தால் அப்போது நாங்கள் அவரை  தவிர்த்திருப்போம். மோடி எங்களுக்கு எந்த காலத்திலும் எதிரியாக இருந்ததில்லை. பிரதமர் மோடி எங்களுக்கு எதிரியை அல்ல, இந்துத்துவா தான் எதிரி.

அதிமுக ஆட்சியின் போது அவருக்கு கருப்புக்கொடி காட்டி நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம் என்றால் அவர் தமிழர்களுக்கு எதிராக அப்போது செயல்பட்டார். அதனால் எதிர்ப்பு தெரிவித்தோம், இப்போதும் பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் முன் வைத்து இருக்கிறோம், அவர் செய்து தருவதாக கூறி இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் இருக்கிறோம். அதிமுகவை போல நாங்கள் இல்லை, அவர்கள் சொல்வதற்கெல்லாம் அதிமுகவினர் தலையாட்டினார்கள். நாங்கள் யாருடைய காலிலும் விழவில்லை. திமுக தன்மானத்தோடு நடந்துகொள்கிறது. இவ்வாறு ஆர். எஸ் பாரதி கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!