இந்து மதத்தை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும்... பாஜக எம்.பி., வலியுறுத்தல்..!

By Thiraviaraj RM  |  First Published Dec 27, 2021, 10:55 AM IST

இந்துக்களுக்கு மறு மதமாற்றம் இயல்பாக வரவில்லை, ஆனால் இந்துக்கள் பரிணாம வளர்ச்சியடைந்து, மதம் மாறிய அனைவரையும் மீண்டும் தாய் மதத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்றார்.
 


இந்து மதத்தை விட்டு வெளியேறிய அனைவரும் மீண்டும் மதமாற்றம் செய்யப்பட வேண்டும் என பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவரும் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா, பிற மதங்களுக்கு மாறிய இந்துக்களுக்காக கர் வாபசி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளார். இந்து மதத்தை விட்டு வெளியேறிய அனைவரும் மீண்டும் மதமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு கோயிலுக்கும், மடத்துக்கும் ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Latest Videos

கர்நாடகாவின் உடுப்பியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "இந்து மதத்தை விட்டு வெளியேறிய அனைவரையும் மீண்டும் மதம் மாற்றுவது மட்டுமே இந்துக்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி. இது இயற்கையாக நமக்கு வரவில்லை, ஆனால் இன்று நாம் உருவாக வேண்டும். இந்த உருமாற்றம் நம் டிஎன்ஏவில் வர வேண்டும்." இந்துக்களுக்கு மறு மதமாற்றம் இயல்பாக வரவில்லை, ஆனால் இந்துக்கள் பரிணாம வளர்ச்சியடைந்து, மதம் மாறிய அனைவரையும் மீண்டும் தாய் மதத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்றார்.

வெகுஜன மத மாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கும் மதமாற்ற எதிர்ப்பு மசோதாவை கர்நாடக சட்டசபை நிறைவேற்றிய சில நாட்களுக்குப் பிறகு தேஜஸ்வி சூர்யா இப்படி பேசியுள்ளார். இந்த மசோதா வசீகரம், வற்புறுத்தல், பலாத்காரம் அல்லது மோசடியான வழிமுறைகள் மூலம் மதமாற்றத்தைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

click me!