மோடி சுயநலக் கொலைகாரர்... சீனா- பாகிஸ்தான் பிரதமர்கள்தான் கெத்து... சுந்தரவல்லி தெனாவெட்டு திமிர் பேச்சு..!

By Thiraviaraj RMFirst Published Jun 26, 2020, 10:56 AM IST
Highlights

மோடி இந்திய ராணுவ வீரர்களை தனது சுயநலத்துக்காக கொல்லும் கொலைகாரர், சீனா, பாகிஸ்தான் பிரதமரும் தான் கெத்தானவர்கள் என அரசியல் பேச்சாளர் சுந்தரவள்ளி இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியுள்ளார்.

மோடி இந்திய ராணுவ வீரர்களை தனது சுயநலத்துக்காக கொல்லும் கொலைகாரர், சீனா, பாகிஸ்தான் பிரதமரும் தான் கெத்தானவர்கள் என அரசியல் பேச்சாளர் சுந்தரவள்ளி இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியுள்ளார்.

இந்த வீடியோ பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. அந்த வீடிஓவில்,’’ராணுவ வீரர்களின் பிணத்தை வைத்துக் கொண்டு தன்னை திடப்படுத்திக் கொண்டு இருக்கிறார் மோடி. ஏதாவது பிரச்சினை மோடிக்கு வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். அல்லது மூடி வைக்க வேண்டும் அல்லது மக்களை தூண்டி விட வேண்டும் மக்களை திசை திருப்ப வேண்டும். இதில் எது நடக்கலை நடக்கவில்லை என்றாலும் ராணுவ வீரர்களை கொல்ல வேண்டும். இதுதான் மோடியின் ஃபார்முலா. மோடி அங்கிருந்து ராணுவ வீரர்களை பறிகொடுத்துவிட்டு தன்னையும் தக்கவைக்க வேலை செய்கிறார். குறைந்தபட்ச அறிவும் பகுத்தறிவும் நமக்கு இல்லாமல் இருந்தது.

இருக்கிற எங்களைப்போன்ற ஒன்றிரண்டு பேர் கேள்வி கேட்டோம். உடனே மாவீரன் என்று மாற்றினார்கள். பாகிஸ்தானில் ஒருவர் தவறி விழுந்துவிட்டார். இப்படி தவறி விழுந்த ஒருத்தரை கூப்பிட்டு கோட் சட்டை எல்லாம் வாங்கிக் கொடுத்து போய்விட்டு வா என்று அனுப்பி வைத்தார்கள். அண்டை நாட்டோடு சண்டை போடுவது நோக்கம் இல்லை என்பதை உணர்த்தும் நோக்கமாக அங்கிருக்கிற பாகிஸ்தான் பிரதமர் கோட் சட்டை வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தார். 

உடனே இங்கிருப்பவர்கள் பார்த்தீர்களா? மோடியின் ஆளுமையை என பெருமை பேசினார்கள். உள்நாட்டில் இருக்கிற 40க்கு மேற்பட்ட இராணுவ வீரர்களை பாதுகாக்க வக்கில்லாத இந்த மோடி வெளிநாட்டில் இருந்தாலும் கூட எதிரி நாட்டு படை வீரராக இருந்தாலும் சரி, அத்தோடு வீட்டுக்கு போய் சேரவேண்டும் அனுப்பியவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். நாமதான் பகுத்தறிவோடு யோசிக்க மாட்டோமே. 

மூங்கில் கட்டைகளிலும் பெரிய பெரிய பலகைகளிலும் ஆனிகள் அறையப்பட்டு அதை ஆயுதமாக எடுத்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சீன அரசு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என்று சொல்கிறது. ஏன் பொறுப்பேற்க மாட்டோம் என்றால் இது எங்கள் எல்லையில் நடந்திருக்கிறது. இரண்டரை கிலோ மீட்டர் எங்கள் எல்லைக்குள் வந்து உங்கள் ராணுவத்தினர் அடித்திருக்கிறார்கள் என சீன அதிகாரிகளும், வெளியுறவுத் துறை அதிகாரிகளும் கூறுகிறார்கள். 

பத்து நாளைக்கு முன்பு எல்லையில் ராணுவத்தை குவித்து, பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது எல்லையை தாண்டி சென்று சண்டையிட அதற்கான பயிற்சியை கொடுத்திருக்கிறீர்கள். அங்கே இருக்கிற தகவல் தொடர்புகளை எல்லாம் துண்டித்து இருக்கிறார்கள். இந்தியா சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டுமானப் பணிகளை செய்கிறது என சீனா குற்றம் சாட்டுகிறது’’ என இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தாலுக்கும், சீனாவுக்கும் ஆதரவாக சுந்தரவள்ளி பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. 

click me!