பொதுத்துறைகளுக்கு மூடுவிழா நடத்தும் மோடி அரசு... ப.சிதம்பரம் வேதனை..!

Published : Sep 10, 2021, 11:45 AM IST
பொதுத்துறைகளுக்கு மூடுவிழா நடத்தும் மோடி அரசு... ப.சிதம்பரம் வேதனை..!

சுருக்கம்

இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்த திட்டங்களை மோடியே பட்டியலிட்டுள்ளார். பிரதமர் மோடி பட்டியலிட்டு கூறியதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு பாராட்டுகளை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ப.சிதம்பரம், ‘’தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் இது எதிரொலிக்கும். இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்த திட்டங்களை மோடியே பட்டியலிட்டுள்ளார். பிரதமர் மோடி பட்டியலிட்டு கூறியதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தியா 70 ஆண்டுகளாக சேர்த்த சொத்துகளை பிரதமர் மோடி விற்பனை வேதனை அளிக்கிறது. பொதுத்துறைக்கு மோடி அரசு மூடுவிழா நடத்துகிறது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் தனியார் மயமாக்குகின்றனர்.

கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்தபோது ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லை என்று மோடி அரசு கூறியது உண்மையல்ல. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, சட்டப்பேரவையில் இருந்து பாஜக மட்டும் தான் வெளிநடப்பு செய்தது. அதிமுக வெளிநடப்பு செய்யவில்லை’’என்று அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி