தமிழகத்தில் இருந்த ஒளிபரப்பாகும் நியுஸ் சேனல்களின் உரிமையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி விருந்து வைத்து அசத்தியுள்ளார்.இந்த சந்திப்பில் பிரபல தொலைக்காட்சிகளில் சன் டிவி குழுமமும் மற்றும் பத்திரிகைகளில் நக்கீரன் இதழை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்கவில்லை. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழகத்தில் தங்களுக்கு சாதகமான ஒரு சூழலை ஏற்படுத்த பா.ஜ.க மேலிடம் பத்திரிரைக மற்றும் ஊடக முதலாளிகள் மற்றும் அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாகவே இது பார்க்கப்படுகிறது.