தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்க சென்ற இடத்தில் கனிமொழிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த வாக்குறுதி தான் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயமாக உள்ளது.அவருக்கு தமிழக அரசு வேண்டிய உதவிகளை மட்டும் அல்ல, உரிய மரியாதையையும் நிச்சயம் அளிக்கும் என்று எடப்பாடி கூறியுள்ளார். இதனை கேட்டு உணர்ச்சிவசப்பட்ட கனிமொழி, தனது தந்தைக்கு மிகப்பெரிய ஒரு ஆசை ஒன்று உண்டு என்று கூறியுள்ளார். அந்த ஆசையை தற்போதைய சூழலில் முதலமைச்சராக இருப்பவரால் தான் நிறைவேற்ற முடியும் என்று கனிமொழி பொடி வைத்துள்ளார். அதனை கேட்டு நிச்சயமாக தன்னால் முடிந்ததை செய்வதாக எடப்பாடி வாக்கு கொடுத்துள்ளதாக கனிமொழி தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார்.