சென்னை அடையாற்றில் டிடிவி தினகரன் வீடு அமைந்துள்ளது. இன்று மதியம் இவரது வீட்டு அருகே நின்றிருந்த இன்னோவா கார் ஒன்றில் திடீரென குண்டு வெடித்தது. இதில் கார் கண்ணாடிகள் தூள் தூளாகின. இதில் கார் டிரைவர் பாண்டிதுரை, புகைப்படக்காரர் மற்றும் அந்த ஏரியாவில் சென்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் என மொத்தம் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அறிந்து, விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள், அங்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆராய்ந்து வருகிறார்கள். விரைவில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கண்டு பிடிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், தற்போது சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.