ஸ்டெர்லைட்க்கு எதிராக நடிகர் கமல் போட்ட டுவிட்டுக்கு எதிராக தமிழிசை பதில் டுவிட் போட்டார். இதற்கு நெட்டிசன்கள் தமிழிசையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தூத்துக்குடி–மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அமைந்து உள்ளது. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று நடைபெற்ற பிரமாண்ட கண்டன போராட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி மக்களுடன் நான் உள்ளேன். ஆலை தொடர்பான மக்கள் போராட்டத்துக்கு என்னை அழைத்தால் வருவேன். ஊடகங்களும், தமிழ் மக்களும் ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை. ஊடகங்கள் இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு தர வேண்டும் என தெரிவித்திருந்தார். இதைதொடர்ந்து இதற்கு பதில் கேள்வி எழுப்புவதாக நினைத்து பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் டுவிட் ஒன்று பதிவிட்டிருந்தார். அதில், உங்களை உருவாக்கிய திரைப்பட தயாரிப்பாளர்களின் போராட்டத்தால் திரைத்துறையின் படைப்பாளிகளும் தொழிலாளர்களும் வேலையிழந்து நிற்பது உங்களுக்கு தெரியுமா.? அவர்களுடன் இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் நெட்டிசன்கள் பலரும் தமிழிசையை விமர்சித்து வருகின்றனர். அதாவது, ஆமா... மருத்துவர்கள் போராட்டம் செஞ்ச போது நீ அந்த பக்கம் போனியா??? இந்த ஊருக்கு உபதேசம் பண்ணுறதை விட்டுட்டு... உனக்கு நீயே சுயபரிசோதனை செய் மாமி என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார். வேலையில்லாமல் இருப்பதை விட, உயிரிழப்பு இல்லாமல் இருப்பதுதான் முக்கியம் மேடம். வேலை போனால் வேற வேலையை தேடிக்கலாம் ஆனால் உயிர் அப்படி இல்லைங்க மேடம். இவங்கலாம் எப்படி தான் டாக்டர் ஆனாங்களோ என மற்றொருவர் விமர்சித்துள்ளார்.