தலித்துகள் என்றாலே இந்த மோடிக்கு பிடிக்காது !!  பகிரங்கமாக குற்றம்சாட்டும் ராகுல் காந்தி!!

Asianet News Tamil  
Published : Apr 09, 2018, 09:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
தலித்துகள் என்றாலே இந்த மோடிக்கு பிடிக்காது !!  பகிரங்கமாக குற்றம்சாட்டும் ராகுல் காந்தி!!

சுருக்கம்

Modi didnot like dalith people

பிரதமர் மோடி தலித் மக்களுக்கு எதிரானவர் என்றும் தலித்துகள் என்றாலே மோடிக்கு பிடிக்காது என்றும் காங்கிரஸ் கட்வித் தலைவர் ராகுல் காந்தி பதிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்

மத்திய அரசின் தலித் விரோத போக்கை கண்டித்தும், காவிரி விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க தவறியதை மக்களிடம் எடுத்துரைக்கும் நோக்கிலும் நாடு முழுவதும் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அழைப்பு விடுத்து இருந்தார்.

அதன்படி அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில்  காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர். நாட்டின் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

டெல்லி ராஜ்காட்டில் நடந்த உண்ணாவிரதத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த போராட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இந்த போராட்டத்துக்கு இடையே செய்தியாளர்களிடம்  பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி சாதி பாகுபாடு காட்டுவதாக பாஜகவின்  தலித் எம்.பி.க்களே கூறியுள்ளதாக குறிப்பிட்டார்.

 பிரதமர் மோடி தலித் மக்களுக்கு எதிரானவர் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும். இது ரகசியம் இல்லை. தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை சித்தாந்தத்தை பாஜக பின்பற்றுகிறது என்றும் ராகுல் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்
விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!