எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி.. எதிரிகளுக்கு சொல்லும் மெசேஜ் என்ன.?

By Ezhilarasan BabuFirst Published Nov 4, 2021, 3:56 PM IST
Highlights

இந்தியா சீனா இடையே பாங்காங் திசோ பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்த வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்த போது துணிந்து எல்லைக்கு பிரதமர் மோடி என்றது சீனாவை கலக்கமடைய வைத்தது.

வழக்கம்போல இந்த ஆண்டும் பிரதமர் ஜம்மு காஷ்மீரில் ரஜவுரியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளார். இது ராணுவ வீரர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அவர் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் அவர் நான்காவது முறையாக இன்று ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு சியாச்சினுக்கு சென்ற மோடி அங்கி ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.

அதைத்தொடர்ந்து 2017ஆம் ஆண்டில் காஷ்மீரில் பந்தி பாராவில் ராணுவ வீரர்கள் மற்றும் பிஎஸ்எப் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார், 2019 ஆம் ஆண்டில் அவர் ரஜவுரியில் காலாட்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார், பின்னர் 2020இல் ராஜஸ்தானில் ஜெய்சால்மரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார், கடந்த சில மாதங்களாக  எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது, அதேபோல் தீவிரவத தாக்குதல்களும் தலை தூக்கி உள்ள நிலையில் பாதுகாப்புக் காரணம் கருதி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாட பிரதமர்  எல்லைக்கு வருவாரா என்ற கேள்விக்குறி ராணுவ வீரர்கள் மத்தியில் இருந்து வந்தது. 

ஆனால் இந்த ஆண்டு பிரதமர் எல்லையில் தீபாவளி கொண்டாடுவார் என உறுதிசெய்யப்பட்டது, எனவே மோடியின் வருகையையொட்டி ரஜவுரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை ஜம்முவுக்கு புறப்பட்டுச் சென்ற அவர், ராணுவ வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ரஜவுரியில் ராணுவ வீரர்களுடன் இனிப்பு வழங்கி தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினார். எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் இந்தியா அஞ்சாது என்பதை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அவரின் இந்த பயணம் அமைந்துள்ளது. அதேவேளையில் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார், அதில் இந்த ஆண்டு தீபாவளி உங்கள் வாழ்வில் செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவர வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த தீபாவளியில் ராணுவ வீரர்களை ஊக்குவிப்பதுடன், எல்லை தாண்டி வலுவான செய்தியை சொல்லும் வகையில் அவரது இந்த தீபாவளி பண்டிகை அமைந்துள்ளது.  சமிபத்தில் எல்லையில்  பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில்  சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், இந்த நிலையில் எல்லைக்கு மோடி சென்றிருப்பது  எதிரி நாடுகளுக்கு வலுவான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.  காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில் மோடியின் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இந்தியா சீனா இடையே பாங்காங் திசோ பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்த வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்த போது துணிந்து எல்லைக்கு பிரதமர் மோடி என்றது சீனாவை கலக்கமடைய வைத்தது.  ராணுவத்துடன் ஒட்டு மொத்த இந்திய தேசமும் நிற்கிறது  என்பதையும், இந்தியாவை சீண்டினால் வலுவான மீள முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்பதையும் அது வலியுறுத்தியது. இந்ந நிலையில் பிரதமரின் இந்த ஆண்டு ராணுவ வீரர்களுடான கொண்டாட்டம் அதேபோன்றதொரு எச்சரிக்கையை நமது எதிரிகளுக்கு கொடுக்கும் வகையாலானது என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.   
 

click me!