அதிமுகவை ஆட்டயப்போடும் பாஜக..! மோடியும் எம்ஜிஆரும் ஒன்றுதான்... வானதி சீனிவாசன் அதிரடி... அதிமுக அதிர்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Nov 7, 2020, 2:06 PM IST
Highlights

எம்.ஜி.ஆர். பெண்கள் மத்தியில் பிரபலமானவர். பெண்கள் மீது கருணை, பாசம் இருந்தது. அதுபோல் தான் பிரதமர் மோடி தமிழக பெண்களுக்கு பாதுகாவலராக திட்டங்கள் முலம் இருக்கிறார். 

பா.ஜ.க. யாத்திரையில் எம்.ஜி.ஆர். படத்தை பயன்படுத்துவதில் தவறு இல்லை  என சென்னை  விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன்  தேசிய பா.ஜ.க. மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டியளித்தார். 

தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் தலைமையில் தமிழகம் முழுவதும் வெற்றி வேல் யாத்திரை மூலமாக அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லக்கூடிய வகையில் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது துரதிர்ஷ்டவசமானது. யாத்திரை சென்ற மாநில தலைவர் உள்பட நிர்வாகிகளையும் கைது செய்து உள்ளனர். 

கொரோனா காலத்தில் சிறிது சிறுதாக தொற்றில் இருந்து மக்கள் பாதுகாத்து கொள்ள வாழ்க்கை முறையை அமைத்து வாழ ஆரம்பித்து உள்ள சூழ்நிலையில் அரசியல் கட்சியான நாங்களும் மக்களை எப்படி சந்திப்பது, கருத்துகளை எடுத்து சொல்வது எப்படி என்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் யாத்திரை செய்யப்பட்டது. மீண்டும் யாத்திரையை நாளை பா.ஜ.க. தலைவர் தொடர இருக்கிறார். இந்த யாத்திரைக்கு மாநில அரசு ஒத்துழைப்பு தந்து தொற்றிலிருந்து பாதுகாப்புடன் செல்ல எந்தவொரு கட்டுபாட்டு விதிமுறைகளை விதித்தாலும் யாத்திரை தொடர முதலமைச்சர் அனுமதி தர  வேண்டும்.  

எம்.ஜி.ஆர். பெண்கள் மத்தியில் பிரபலமானவர். பெண்கள் மீது கருணை, பாசம் இருந்தது. அதுபோல் தான் பிரதமர் மோடி தமிழக பெண்களுக்கு பாதுகாவலராக திட்டங்கள் முலம் இருக்கிறார். அதை சொல்ல தான் பா.ஜ.க. கலைப்பிரிவு எம்.ஜி.ஆர். படத்தை பயன்படுத்தி இருப்பார்கள். எம்.ஜி.ஆர். படத்தை பயன்படுத்துவதில் தவறு இல்லை. காமராஜர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆனால் இன்றும் அவருக்கு மரியாதை தருகிறோம். காமராஜர் வழியில் ஆட்சியை நடத்த வேண்டும் என்ற கருத்தை பா.ஜ.க. பல்வேறு இடங்களில் சொல்லி வருகிறது. நேர்மையான எளிமையான வெளிப்படையான நிர்வாகம் செய்த காமராஜரை உதாரணமாக சொல்லுகிறோம். நல்ல தலைவர்களை எடுத்து கொண்டாடுவதில் தவறு கிடையாது என்றார்.

 

click me!