ஜனநாயகத்தின் ஆன்மாவை மோடி, அமித் ஷா காயப்படுத்தி விட்டார்கள்.. கொட்டும் மழையில் நெருப்பை கக்கிய ராகுல்..!

By vinoth kumarFirst Published Jul 28, 2021, 7:37 PM IST
Highlights

நாங்கள் ஒரு கேள்வியை மட்டுமே கேட்க விரும்புகிறோம். இந்திய அரசு பெகாசஸை வாங்கியதா இல்லையா? அரசு தனது சொந்த மக்களுக்கு எதிராக பெகாசஸ் ஆயுதத்தைப் பயன்படுத்தியதா? பெகாசஸ் குறித்து அவையில் எந்த விவாதமும் நடைபெறாது என அரசாங்கத்தால் எங்களுக்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல்கள் நெறிக்கப்படுகின்றன. 

நாடாளுமன்றத்தில் நாங்கள் இடையூறு ஏற்படுத்தவில்லை. எங்கள் கடமையை மட்டுமே செய்கிறோம் என ராகுல் காந்தி ஆவேசமாக கூறியுள்ளார். 

நாட்டையே உலுக்கியுள்ள பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளிக்கையில்;- இந்தியாவின் ஜனநாயக அமைப்பிற்கு எதிராக பெகாசஸ் மென்பொருளை மோடியும் அமித்ஷாவும் ஏன் உபயோகப்படுத்தியுள்ளனர். பிரதமர் மோடி இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவை காயப்படுத்தி விட்டார்.

இந்த நாட்டின் இளைஞர்களிடம் நான் கேட்க விரும்புவது இதை தான். உங்கள் செல்போன்களுக்கு பிரதமர் மோடி பெகாசஸ் எனும் ஆயுதத்தை அனுப்பினார். அதே ஆயுதத்தை எனக்கு எதிராகவும் அனுப்பியுள்ளார். நான் மட்டுமல்ல, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பட்டாளர்கள் என பலரது செல்போன்களுக்கும் பெகாசஸ் ஆயுதம் அனுப்பப்பட்டுள்ளது.

நாங்கள் ஒரு கேள்வியை மட்டுமே கேட்க விரும்புகிறோம். இந்திய அரசு பெகாசஸை வாங்கியதா இல்லையா? அரசு தனது சொந்த மக்களுக்கு எதிராக பெகாசஸ் ஆயுதத்தைப் பயன்படுத்தியதா? பெகாசஸ் குறித்து அவையில் எந்த விவாதமும் நடைபெறாது என அரசாங்கத்தால் எங்களுக்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல்கள் நெறிக்கப்படுகின்றன. இது தீவிரவாதிகள் மற்றும் தேச விரோதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படிருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நாங்கள் இடையூறு ஏற்படுத்தவில்லை; எங்கள் கடமையை மட்டுமே செய்கிறோம் என ராகுல் கூறியுள்ளார்.

click me!