இது தவறான கருத்து... அதிமுக முன்னாள் எம்.பி.க்கு எதிராக கொதிக்கும் செல்லூர் ராஜூ..!

By vinoth kumarFirst Published Jul 28, 2021, 6:58 PM IST
Highlights

சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை பயன்படுத்தாததே தோல்விக்கு காரணமென அன்வர் ராஜா பேசியிருக்கிறார். இது தவறான கருத்து. தலைவர்கள் பெயர்கள் இல்லாமல் அதிமுக இல்லை. அவர் கூறி கருத்து தவிர்க்கப்பட வேண்டியது. 

எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பெரியதாக வைத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் படங்களை சிறிதாக வைத்துதான் பிரசாரம் செய்யப்பட்டது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா;- தேர்தல் நேரத்தில் கிராம மக்கள் அதிமுகவினரிடம் எதிர்பார்ப்பது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பேரை சொல்கிறார்களா என்பதைத்தான். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பேரை சொல்லாமல் மறைத்தால், மக்கள் நம்மை மறந்து விடுவார்கள். தேர்தலின்போது பல இடங்களில் அதுதான் நடந்தது. ஆனாலும், 75 இடங்களில் நாம் வெற்றி பெற்று விட்டோம். 

ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது 200 பேர் தற்கொலை செய்தனர். இந்த தேர்தலில் ஜெயலலிதா உயிருடன் இருந்து முதலமைச்சர் பதவியை இழந்திருந்தால், 300 -க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தற்கொலை செய்திருப்பார்கள். ஆனால், இப்போது தோற்றதற்கு கட்சியினர் யாரும் கவலைப்படவில்லை என பேசியிருப்பது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், மதுரையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை பயன்படுத்தாததே தோல்விக்கு காரணமென அன்வர் ராஜா பேசியிருக்கிறார். இது தவறான கருத்து. தலைவர்கள் பெயர்கள் இல்லாமல் அதிமுக இல்லை. அவர் கூறி கருத்து தவிர்க்கப்பட வேண்டியது. 

எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பெரியதாக வைத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் படங்களை சிறிதாக வைத்துதான் பிரசாரம் செய்யப்பட்டது. தோல்விக்கு பாஜக உள்ளிட்ட தோழமை கட்சிகள் காரணம் அல்ல என்றார். 

click me!