மாநில கட்சிகளை வீழ்த்த பக்கா வியூகம்... மரண மாஸ் காட்டும் மோடி அமித் ஷா!!

By sathish kFirst Published Jan 16, 2019, 12:06 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை அக்கட்சியின் தொண்டர்கள் தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மத்தியில் ஆளுங்கட்சியான பாஜக தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுத்துவருகிறது. காங்கிரஸ் கூட்டணி, பல மாநிலங்களில் பலமாக இருக்கும் மாநில கட்சிகளை வீழ்த்த கட்சித் தலைவர் அமித் ஷாவும் பிரதமர் மோடியும் திட்டமிட்டுவருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் நாடளுமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடிவருகிறார். 

ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சி மேலிடப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள், தேர்தல் கூட்டணி, தொகுதிகளின் சாதக, பாதக அம்சங்களை அளிக்க பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் தொண்டர்களின் கருத்தையும் கேட்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதற்காக வீடியோ ஒன்றை தனது சமூக ஊடகப் பக்கங்களில் மோடி வெளியிட்டுள்ளார். இதில் 12 கேள்விகளை கேட்டு, அந்தக் கேள்விகளுக்கு ‘நமோ ஆப்’ மூலம் பதில் தரும்படி மோடி பாஜக தொண்டர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார். 

லோக் சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் பா.ஜ.க.வுக்கு பாதிப்பு ஏற்படுமா? பாஜக ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த மதிப்பீடு, தற்போதைய தொகுதி எம்.பி.யின் செயல்பாடு எப்படி உள்ளது போன்ற கேள்விகள் இதில் இடம் பெற்றுள்ளன. 

முக்கியமாக, தொகுதியில் பா.ஜ.க.வில் வேட்பாளராக தகுதியான 3 பேரை குறிப்பிடும்படியும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. தொண்டர்கள் அதிகமாகக் குறிப்பிடும் பெயர்களை கட்சித் தலைமை கவனத்தில் கொண்டு வேட்பாளரை தேர்வு செய்யவே இந்தத் திட்டம் என்று பாஜகவில் கூறுகிறார்கள்.
 

click me!