திமுகவுக்கு தான் வெற்றி... அட்ச்சி தூள் பண்ணும் துக்ளக் குருமூர்த்தி... அலறலில் அதிமுக தலைகள்!!

Published : Jan 16, 2019, 11:34 AM IST
திமுகவுக்கு தான் வெற்றி... அட்ச்சி தூள் பண்ணும் துக்ளக் குருமூர்த்தி...  அலறலில் அதிமுக தலைகள்!!

சுருக்கம்

எதிர்வரும் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக ஆடிட்டரும் துக்ளக் ஆசிரியருமான எஸ். குருமூர்த்தி தெரிவித்தார்.  துக்ளக் வார இதழின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா கோவையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற எஸ்.குருமூர்த்தி, அரசியல் ரீதியாகப் பேசிய பேச்சின் தொகுப்பு:

பிரதமர் நரேந்திர மோடி மீது எந்தக் குற்றச்சாட்டையும் சொல்ல முடியாதவர்கள்தான், அவர் வெளிநாடுகளுக்கு அதிகளவில் பயணம் மேற்கொள்கிறார் என்று பேசுகிறார்கள். அவரது வெளிநாட்டு பயணங்களால் உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்துள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது.

காங்கிரஸ் தன் மீதான குற்றத்தை மறைக்கவே ரபேல் ஒப்பந்தத்தில் பாஜக மீது குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் காங்கிரஸிடம் இல்லை. பாஜகவின் இந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. 70 ஆண்டுகால இந்திய வரலாற்றில் ஊழலற்ற ஆட்சியை அளித்து வரும் கட்சி பாஜகதான். 

ராகுல் காந்தியைப் பிரதமராக்க பல கட்சிகள் உழைத்து வருகின்றன. ஆனால், அவருக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. செல்லப் பிள்ளையாகவே இருக்கிறார். பாஜகவை எதிர்க்கும் கட்சிகளிடம்  ஒற்றுமை இல்லை. ராகுல் காந்தியை ஆதரிக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் சுய லாபத்துக்காகத்தான் அவரை ஆதரிக்கின்றனர். வலுவான ஆட்சியை வழங்குவது அவர்களது நோக்கமல்ல. 

பாஜக அறிமுகப்படுத்தும் அனைத்துமே தவறான திட்டங்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. இதை மாற்றவும் தமிழகத்தில் காலூன்றவும் எதிர்வரும் தேர்தல்களில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது அவசியம்.  தமிழகத்தில் ஊழல் கலாசாரத்தைக் கொண்டு வந்தது திமுகதான். இந்தக் கட்சியைத் தடுக்க வேண்டுமென்றால், அதற்கு தமிழகத்தில் பாஜகவுக்கு அதிமுகவின் துணை வேண்டும். 

பின்னர் வாசகர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், “தமிழகத்தில் தற்போது அதிமுகவைவிட திமுக பலமாக உள்ளது. அதிமுகவைவிட திமுக நிலையான தலைமையைக் கொண்டுள்ளது. எனவே எதிர்வரும் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கருதுகிறேன்” என்று குறிப்பிட்டார். 
 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!